அவுனியாபுரத்தில் ஜல்லிக்கட்டு போராட்டம் - யுவன்,அமீர்,ஆர்யா பங்கேற்பு - போலீஸ் தடியடி

First Published Jan 14, 2017, 12:21 PM IST
Highlights

பொங்கல் திருநாளான இன்றும் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவான போராட்டங்கள் தீவிரமடைந்துள்ளன. மதுரை அவனியாபுரத்தில் ஆண்டுதோறும் பொங்கலன்று ஜல்லிகட்டு நடைபெறும். ஆனால் இந்த ஆண்டும் ஜல்லிக்கட்டுக்கு  தடைவிதிக்கப்பட்டுள்ளதால் அப்பகுதி மக்கள் மிகுந்த வேதனை அடைந்துள்ளனர்.

ஆனாலும் தடையை மீறி இன்று அவனியாபுரத்தில்  ஜல்லிக்கட்டு நடைபெற்றது. ஆனால் காவல் துறையினர் அவர்களை கைது செய்யப்பட்டதையடுத்து கொதித்தெழுந்த பொது மக்கள் ஆயிரக்கணக்கில் ஒன்றுகூடி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்,

இவர்கள் போராட்டத்துக்கு ஆதரவாக அங்கு வந்து சேர்ந்தனர் நடிகர் ஆர்யா, இயக்குனர் அமீர் மற்றும் இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா ஆகியோர்.  அவர்களைப் பார்த்ததும் உற்சாகமடைந்த பொதுமக்கள் இன்றும் வீருகொண்டு எழுந்து போராட்டத்தில் குதித்தனர்.

அமீர், ஆர்யா, யுவன் சங்கர் ராஜா ஆகியோரும் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக குரல் எழுப்பினர். ஜல்லிக்கட்டு ஆதரவாளர்கள் நெருக்கியடித்துக் கொண்டு முன்னேறினர். இதனால் அங்கு தள்ளுமுள்ளு ஏற்பட்டது. போலீசார் லேசான தடியடி நடத்தி அவர்களை மீட்டுச் சென்றனர்.

முன்பு  நடிகர் ஆர்யா ட்விட்டரில் பீட்டா அமைப்புக்கு ஆதரவு தெரிவித்து கருத்து தெரிவித்தால் போராட்டஹில் ஈடுபட்டவர்கள் அவருக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். இதனையடுத்து போலீசார் அவரி அங்கிருந்து அப்புறப்படுத்தினர்.

இந்நிலையில் நேரம் ஆக ஆக கூட்டம் அதிகரித்தது. போலீசாருக்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையே வாக்குவாதம் முற்றி அங்கு சலசலப்பு ஏற்பட்டது.

இதனால் போலீசார் அங்கு போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது தடியடி நடத்தி விரட்டினர்.

இதில் போராட்டத்தில் ஈடுப்பட்ட்டிருந்த இயக்குனர் கௌதமன் காயமடைந்தார்.

click me!