
கலெக்டரை ஓட ஓட விரட்டி அடித்த அலங்காநல்லூர் பொதுமக்கள்.. நிரந்தர சட்டம் இயற்றிய பின் உள்ளே வாங்க என பெண்கள் சீற்றம்…
தமிழகத்தில் ஜல்லிக்கட்டு நடத்துவது தொடர்பாக தமிழக அரசு அவசர சட்டம் பிறப்பித்தது. இதனையடுத்து , மதுரை மாவட்டம் அலங்காநல்லூர், அவனியாபுரம், பாலமேடு ஆகிய கிராமங்களில் த்தில் ஜல்லிக்கட்டு நடத்துவதற்கான ஏற்பாடுகளை மாவட்ட நிர்வாகம் உடனடியாக தொடங்கியது.
ஆனால் ஜல்லிக்கட்டு நடத்துவதற்கு நிரந்தர சட்டம் மட்டுமே இயற்றப்பட வேண்டும் என வலியுறுத்தி அலங்காநல்லூரில் போராட்டம் நடைபெற்று வருகிறது.து.
அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டுக்கான பணிகளை மாவட்ட நிர்வாகம், அலங்காநல்லூர் பேரூராட்சி, பொதுப்பணித்துறையினர் நேற்று மாலை மேற்கொண்டனர். வாடிவாசல் பகுதியை சுத்தம் செய்து, பார்வையாளர் அரங்கம், தடுப்புகள் அமைக்கும் பணி உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்பட்டன.
இதுகுறித்து தகவல் அறிந்த போராட்டத்தில் ஈடுபட்டு இருந்த கிராமத்தினர், இளைஞர்கள் அங்கு திரண்டு வந்தனர்.
அவர்கள் ஜல்லிக்கட்டு நடத்த பிறப்பிக்கப்பட்ட அவசர சட்டத்தை ஏற்கமுடியாது, ஜனாதிபதி ஒப்புதலுடன் நிரந்தர சட்டம் கொண்டுவரவேண்டும். அதுவரை எங்கள் போராட்டம் தொடரும். அதுவரை ஜல்லிக்கட்டு நடத்தக்கூடாது என்று கோஷமிட்டனர்.
மேலும் வாடிவாசலை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
.இதற்கிடையே, ஜல்லிக்கட்டு நடத்துவது தொடர்பாக வாடிவாசல் பகுதியை ஆய்வு செய்ய, கலெக்டர் வீரராகவராவ் அலங்காநல்லூர் வந்தார். அப்போது அலங்காநல்லூர் கேட்டுக்கடை பகுதியில் போராட்டத்தில் ஈடுபட்டு இருந்தவர்களும் கிராம மக்களும் கலெக்டரை வழிமறித்தனர். அப்போது ஜனாதிபதி ஒப்புதலுடன் ஜல்லிக்கட்டுக்கு தடையில்லா நிரந்தர சட்டம் இயற்றவேண்டும் என்று தெரிவித்தனர்.
இதையடுத்து கலெக்டர் காரில் இருந்து இறங்கி போராட்டம் நடைபெற்ற இடத்துக்கு சென்று அங்கிருந்தவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். அதில் சமரசம் அடையாத அங்கிருந்தவர்கள்,நிரந்தர சட்டம் இயற்றவேண்டும், அதுவரை ஜல்லிக்கட்டு நடத்த அனுமதிக்க மாட்டோம், ஜல்லிக்கட்டு நடக்காது“ என்று தெரிவித்து கோஷமிட்டனர்.இதையடுத்து கலெக்டர் அங்கிருந்து தப்பி ஓடினார்