அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு ரத்து?...இளைஞர்களின் எதிர்ப்பால் சென்னை திரும்புகிறார் ஓபிஎஸ்…

 
Published : Jan 22, 2017, 09:29 AM ISTUpdated : Sep 19, 2018, 03:00 AM IST
அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு ரத்து?...இளைஞர்களின் எதிர்ப்பால் சென்னை திரும்புகிறார் ஓபிஎஸ்…

சுருக்கம்

 

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு ரத்து?...இளைஞர்களின் எதிர்ப்பால் சென்னை திரும்புகிறார் ஓபிஎஸ்…

ஜல்லிக்கட்டு நடைபெறுவதில் சிக்கல் நீடிப்பதால் மதுரையில் இருந்து முதலமைச்சா் ஓ. பன்னீா்செல்வம் இன்று சென்னை திரும்புவதாக தகவல் வெளியாகியுள்ளது.

 

ஜல்லிக்கட்டு தடைக்கு நிரந்தரத் தீர்வு எட்டப்படும் வரை  மாணவா்கள், இளைஞா்கள் பொதுமக்கள் ஆகியோர் உறுதியுடன் தொடா்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருவதால், மதுரை மாவட்டம் அலங்காநல்லூாரில் இன்று நடைபெறுவதாக இருந்த ஜல்லிக்கட்டு நிகழ்ச்சி இழுபறியில் உள்ளது

 ஓபிஎஸ் இன்று காலை 10 மணிக்கு நடைபெறுவதாக இருந்த நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்நிலையில், ஜல்லிக்கட்டு நடைபெறும் வாடிவாசல் பகுதியில் பொதுமக்கள் நிரந்தர சட்டம் இயற்றக்கோரி போராட்டத்தில் ஈடுபட்டு வருவதால், ஜல்லிக்கட்டு போற்றி நடைபெறுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. 

இதுதொடா்பாக முதலமைச்சா். ஓ. பன்னீா்செல்வம் மதுரையில் உயரதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி வருகிறார். இதன்பின்னா் அலங்காநல்லூா் பயணத்தை ரத்து செய்து விட்டு அவா் சென்னை திரும்புவார் என தகவல் வெளியாகியுள்ளது.

 

 

 

PREV
click me!

Recommended Stories

முதல்வரோடு முருகன் கைகோத்துள்ளார்..! ஸ்டாலினிடம் இருந்து முருகனை யாராலும் பிரிக்க முடியாது..! சேகர்பாபுவின் முரட்டு முட்டு..!
தனி அறையில் 45 வயது பெண்.. விடாமல் இரவு முழுவதும் 5 பேர்.! மறுநாள் மரணம்.. நடந்தது என்ன?