ஜல்லிக்கட்டுக்கு நிரந்தர தீர்வு … தமிழக அரசு சார்பில் உச்சநீதிமன்றத்தில் கேவியட் மனு!

Asianet News Tamil  
Published : Jan 22, 2017, 09:42 AM ISTUpdated : Sep 19, 2018, 03:00 AM IST
ஜல்லிக்கட்டுக்கு நிரந்தர தீர்வு … தமிழக அரசு சார்பில் உச்சநீதிமன்றத்தில் கேவியட் மனு!

சுருக்கம்

ஜல்லிக்கட்டுக்கு நிரந்தர தீர்வு … தமிழக அரசு சார்பில் உச்சநீதிமன்றத்தில் கேவியட் மனு!

ஜல்லிக்கட்டு தொடர்பாக, தமிழக அரசு சார்பில்  கேவியட் மனு உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. 

ஜல்லிக்கட்டு விவகாரத்தில், தமிழகம் முழுவதும் மாணவா்கள், இளைஞா்கள், பொதுமக்களின் எழுச்சியால்,  உலகமே திரும்பி பாா்க்க வைத்த போராட்டமாக  இது மாறியுள்ளது.

 இதனால் மத்திய மாநில அரசுகள் கதிகலங்கி நிற்கின்றன. ஆனாலும் கூட அரசு இயந்திரம் மந்தநிலையிலேயே இருக்கின்றன. 

ஜல்லிக்கட்டு தடைக்கு நிரந்தரத் தீர்வு எட்டப்படும் வரை  மாணவா்கள், இளைஞா்கள் பொதுமக்கள் ஆகியோர் உறுதியுடன் தொடா்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருவதால், மதுரை மாவட்டம் அலங்காநல்லூாரில் இன்று நடைபெறுவதாக இருந்த ஜல்லிக்கட்டு நிகழ்ச்சி இழுபறியில் உள்ளது.

எனவே நிரந்தர தீர்வு எட்டப்படுவது தொடர்பான சட்ட நடவடிக்கைகளை தொடங்கியுள்ளது.

போராட்டத்தின் உச்சகட்டத்தைத் தொடர்ந்து, அவசர அவசரமாக மாநில அரசு காய்களை நகா்த்தி வருகிறது.

இதனிடையே, ஜல்லிக்கட்டு தொடர்பாக, தமிழக அரசு சார்பில்  கேவியட் மனு உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

ஜல்லிக்கட்டு விவகாரத்தில் தமிழக அரசின் கருத்தை கேட்காமல் எந்த உத்தரவும் பிறப்பிக்கக்கூடாது என அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

 

 

PREV
click me!

Recommended Stories

Tamil News Live Today 1 January 2026: Gold Price Today (ஜனவரி 1) - புத்தாண்டில் தங்கம் விலை 'தடாலடி' சரிவு.! லட்சத்தை விட்டு இறங்கிய தங்கம்.!
முக்தார் மீது காவல்துறை நடவடிக்கை எங்கே? நீதிமன்ற படியேறிய காங்கிரஸ் தலைவர் பிரபு!