விளக்கம் கேட்கிறது மத்திய அரசு – “கலவரம் ஏன்…?” தமிழக உள்துறை செயலாளருக்கு கடிதம்

Asianet News Tamil  
Published : Jan 24, 2017, 11:41 AM ISTUpdated : Sep 19, 2018, 03:00 AM IST
விளக்கம் கேட்கிறது மத்திய அரசு – “கலவரம் ஏன்…?” தமிழக உள்துறை செயலாளருக்கு கடிதம்

சுருக்கம்

தமிழகத்தில் ஜல்லிக்கட்டு போட்டி நடத்த வேண்டும் என, அனைத்து மாவட்டங்களிலும் கடந்த ஒரு வாரமாக கல்லூரி மாணவர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.

போராட்டத்தை கைவிடும்படி, அரசு தரப்பில் பல கட்ட பேச்சு வார்த்தை நடத்தியபோதும், ஜல்லிக்கட்டு நடத்துவதற்கு நிரந்தர சட்டம் கொண்டு வரவேண்டும் என திட்டவட்டமாக அறிவித்தனர். அதே நேரத்தில் அவர்களுக்கு, பொதுமக்களின் ஆதரவும் பெருகியது.

இதையடுத்து முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், கடந்த வெள்ளிக்கிழமை,டெல்லி சென்றார். அங்கு பிரதமர் மோடியை சந்தித்து, அவசர சட்டம் குறித்து பேச்சு வார்த்தை நடத்தினார். இதை தொடர்ந்து, அவசர சட்டம் பிறப்பிக்கப்பட்டது.

ஆனால், போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள், நிரந்தரமான சட்டம் வேண்டும் என வலியுறுத்தினர். இதனால், நேற்று 6வது நாளாக மாணவர்களின் போராட்டம் தொடர்ந்தது,

இதையொட்டி நேற்று அதிகாலையில் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக போராட்டம் நடத்திய கல்லூரி மாணவர்களை, போலீசார் வலுக்கட்டாயமாக அப்புறப்படுத்தினர். இதனால், பெரும் பரபரப்பும், பதற்றமும் ஏற்பட்டது. போலீசார் தடியடி நடத்தி அனைவரையும் கலைய செய்தனர்.

பல இடங்களில் வாகனங்கள் தீ வைத்து எரிக்கப்பட்டன. பெண்கள் மீதும், போலீசார் தடியடி நடத்தினர். அதேபோல் போலீசார் வாகனங்கள் தீயிட்டு எரிக்கப்பட்டன. ஐஅவுஸ் காவல் நிலையமும் தீ வைத்து எரிக்கப்பட்டது. இதனால், சென்னை நகரம் முழுவதும் போர்க்களம் போல் நேற்று காட்சியளித்தது.

இந்நிலையில், தமிழகத்தில் நிலவிய அசாதாரண சூழ்நில தொடர்ந்து, மத்திய அரசு, தமிழகத்தில் நிலவும் சட்டம் ஒழுங்கு குறித்து, தமிழக உள்துறை செயலாளர் மற்றும் தமிழக கவர்னர் ஆகியோருக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளதாக கூறப்படுகிறது.

PREV
click me!

Recommended Stories

'என்னை வெறி ஏத்தி விட்றாத'.. மீண்டும் செய்தியாளரிடம் சீறிய சீமான்! என்ன நடந்தது?
அப்பாடா! தமிழகத்தில் 6 நாட்கள் கொட்டப்போகும் மழை.. எங்கெங்கு? வானிலை லேட்டஸ்ட் அப்டேட்!