
மேனகா காந்தியை டிஸ்மிஸ் செய்ய வேண்டும். மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் ராஜினாமா செய்ய வேண்டும் என மதுரை இளைஞர்கள் ஆவேசத்துடன் கூறினர்.
மோடி சொன்னாலும் சரி. எங்க டாடி சொன்னாலும் சரி போராட்டத்தை கைவிட மோட்டோம் என கொக்கரிக்கின்றனர் மதுரையை சேர்ந்த இளைஞர்கள்.
முதல்வர் ஒ.பி.எஸ்., பிரதமர் மோடியை சந்தித்த பிறகும், ஒரு முன்னேற்றமும் ஏற்படாததால் ஒட்டு மொத்த தமிழர்கள் இடையே மிகுந்த அதிருப்தி ஏற்பட்டுள்ளது. இந்த ஏமாற்றத்துக்கு பிறகு, அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து, போராட்டத்தில் ஈடுபட்ட இளைஞர்கள் ஆலோசனை செய்து வெருகின்றனர்.
அவசர சட்டமோ அல்லது ஜல்லிக்கட்டுக்கு அனுமதி அளிக்கும் வரையோ, போராட்டத்தை கைவிட போவதில்லை என உறுதியாக தெரிவித்துள்ளனர் அலங்காநல்லூரில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்கள்.