மதுரையில் தடையை மீறி ஜல்லிக்கட்டு - 22 காளைகள் பங்கேற்பு

Asianet News Tamil  
Published : Jan 13, 2017, 10:04 AM ISTUpdated : Sep 19, 2018, 02:58 AM IST
மதுரையில் தடையை மீறி ஜல்லிக்கட்டு - 22 காளைகள் பங்கேற்பு

சுருக்கம்

ஜல்லிக்கட்டு நடத்துவதற்கு இன்று அனுமதி கிடைக்கும் எதிர்பார்த்திருந்த நிலையில், இப்போதுதான் தீர்ப்பை எழுதிக்கிட்டிருக்றோம்…பொங்கலுக்குள்ள தீர்ப்பு சொல்ல முடியாது அப்படின்னு உச்சநீதிமன்றம் கைவிரித்து விட்டது.

இதனால் தமிழக மக்கள் கொந்தளித்துப்போயுள்ளனர். ஜல்லிக்கட்டுக்கு ஆதரவான போராட்டம் தமிழகம் முழுவதும் தீவிரமடைந்துள்ளது. கல்லுரி மாணவர்கள் இப்போராட்டத்தை கையில் எடுத்துள்ளதால் எங்கு பார்த்தாலும் பரபரப்பாகவே காணப்படுகிறது.

பெரும்பாலன தமிழர்கள் உச்சநீதிமன்றம் தடை விதித்தால் அதைமீறி ஜல்லிக்கட்டு நடத்தியே தீர வேண்டும் என உறுதியாக உள்ளனர். இந்நிலையில் மதுரையை அடுத்த கரிசல்குளத்தில்  உச்சநீதிமன்ற தடையை மீறி இளைஞர்கள் இன்று ஜல்லிக்கட் நடத்தினர்.

அதிகாலையிலேயே ஜல்லிக்கட்டு நடைபெறும் இடத்துக்கு பல்வேறு மாவட்டங்களில் இருந்து 22 காளைகள் கொண்டு வரப்பட்டன. மேலும் 50 க்கும் மேற்பட்ட மாடுபிடி வீரர்களும் வந்து சேர்ந்தனர்.

இதனைத் தொடர்ந்து உற்சாகமாக ஜல்லிக்கட்டு தொடங்கியது. களத்தில் இறக்கிவிடப்பட்டு சீறிப் பாய்ந்து வந்த காளைகளை இளைஞர்கள் விரட்டிச் சென்று அடக்கினர்.

ஜல்லிக்கட்டை பார்க்க அங்கு ஏராளமானோர் குவிந்தனர். ஜல்லிக்கட்டு நடைபெறுவதை அறிந்து அங்கு வந்த காவல் துறையினர் மற்றும் தாசில்தார் உள்ளிட்டோர் ஜல்லிக்கட்டு நடத்தக்கூடாது என அவர்களிடம் தெரிவித்தனர்.

ஆனாலும் இளைஞர்கள் அங்கு தொடர்ந்து ஜல்லிக்கட்டு நடத்தி வருகின்றனர். தடையை மீறி ஜல்லிக்கட்டு நடத்தும் தங்களை முடிந்தால் கை செய்யுங்கள் என இளைஞர்கள் மிகுந்த எழுச்சியுடன் உள்ளனர்.

PREV
click me!

Recommended Stories

எங்கள் கட்சி பிரச்சினையை நாங்கள் பார்த்துக்கொள்கிறோம்.. திருமா, வைகோவுக்கு கண்டிஷன் போட்ட காங்கிரஸ்
வீடு தேடி வரும் பொங்கல் பரிசு டோக்கன்.. யாருக்கெல்லாம் கிடைக்கும்? எப்போது? ரொக்கம் எவ்வளவு? வெளியான முக்கிய அப்டேட்