அதிகாலையிலே அதிர வைத்த ஜல்லிக்கட்டு…மதுரை ஆலங்குளத்தில் தடையை மீறிய இளைஞர்கள்…

Asianet News Tamil  
Published : Jan 15, 2017, 07:05 AM ISTUpdated : Sep 19, 2018, 02:58 AM IST
அதிகாலையிலே அதிர வைத்த ஜல்லிக்கட்டு…மதுரை ஆலங்குளத்தில் தடையை மீறிய இளைஞர்கள்…

சுருக்கம்

அதிகாலையிலே அதிர வைத்த ஜல்லிக்கட்டு…மதுரை ஆலங்குளத்தில் தடையை மீறிய இளைஞர்கள்…

ஜல்லிக்கட்டுக்கு தொடர்ந்து மூன்றாவது ஆண்டாக தடை தொடர்வதால் கொதித்தெழுந்துள்ள தமிழர்கள் மத்திய அரசுக்கு எதிராகவும்,பீட்டா அமைப்பிற்கும் எதிராக பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகிறது.

உச்சநீதிமன்றத்தின் தடையை மீறி தமிழகத்தின் பல்வேறு இடங்களில் இளைஞர்கள் ஜல்லிக்கட்டு நடத்தி வருகின்றனர். நேற்று ஒரே நாளில் மட்டும் மதுரை மாவட்டத்தில் 7 இடங்களில் ஜல்லிக்கட்டு நடைபெற்றது.

அவனியாபுரத்தில் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக நடைபெற்ற போராட்டத்தில் தடியடி நடத்தப்பட்டு திரைப்பட இயக்குநர் கௌதமன் காயமடைந்தார்.அதேநேரத்தில் தமிழகத்தில் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவான போராட்டம் உச்சகட்டத்தை எட்டியுள்ளது.

இந்நிலையில் மதுரை ஆலங்குளத்தில் இன்று அதிகாலை 5 மணிக்கே ஜல்லிக்கக‘ட்டை தொடங்கிவிட்டனர் இளைஞர்கள். ஆலங்குளம் கண்மாயில் தற்காலிகமாக வாடிவாசல் அமைத்த அவர்கள் 10 மேற்பட்ட காளைகளை ஜல்லிக்கட்டு களத்தில் இறக்கினர்.

நுற்றுக்கு மேற்பட்ட இளைஞர்கள் சீறிப்பாய்ந்த காளைகளை வீருகொண்டு அடக்கினர். காளைகளை அடக்கிய காளையர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. காவல்துறையினர் வந்தாலும் அதையும் மீறி ஜல்லிக்கட்டு நடக்கும் என்று இளைஞர்கள் தெரிவித்தனர்.

இதே போன்று உலக அளவில் ஜல்லிக்கட்டுக்கு பெயர் பெற்ற அலங்காநல்லுரில் கொங்கு இளைஞர் பேரவை சார்பில் தடையை மீறி ,ன்று அதிகாலையிலேயே  ஜல்லிக்கட்டு நடைபெற்றது. வழக்கமாக நடைபெறும் இடத்தில் போலீசார் குசிக்கப்பட்டுள்ளதால், வேறொரு இடத்தில் ஜல்லிக்கட்டு நடைபெற்றது.

இதேபோன்று மதுரையை அடுத்த முடக்கத்தான் கிராமத்தில் இன்று ஜல்லிக்கட்டு நடைபெற்றது.50 க்கும் மேற்பட்ட காளைகள் களத்தில் இறக்கிவிடப்பட்டன.

 

PREV
click me!

Recommended Stories

நீலாங்கரை இல்லம் திரும்பிய தவெக தலைவர் Vijay...
இந்த தேர்தலில் விசில் அடிப்பவர்களை தியேட்டருக்கு அனுப்பிவிடலாம் ..! அரியலூரில் சீறும் திருமாவளவன்!