
அவசர சட்டத்தில் நாளை கையெழுத்திடுகிறார் பிரணாப் முகர்ஜி…ஞாயிற்றுக் கிழமை ஜல்லிக்கட்டு ?
தமிழர்களின் வீரவிளையாட்டான ஜல்லிக்கட்டுக்கு உச்சநீதிமன்றம் தடை விதித்துள்ளதால் கடந்த 2 ஆண்டுகளாக ஜல்லிக்கட்டு நடைபெறவில்லை.
3வது ஆண்டாக இந்த ஆண்டும் ஜல்லிக்கட்டு நடைபெறாததால் தமிழகம் முழுவதும் இளைஞர்கள், மாணவர்கள் ஆவேசம்அடைந்து போராட்டத்தில் குதித்துள்ளனர்.
இந்த நிலையில், ஜல்லிக்கட்டு நடத்துவது தொடர்பாக முதலமைச்சர் ஓபிஎஸ் பிரதமர் மோடியை நேரில் சந்தித்துஆலோசனை நடத்தினார். மோடியிடமிருந்து சாதகமான பதில் கிடைக்காததால் தமிழகத்தில் போராட்டம் மேலும் வீரியமடைந்தது.
ஆனால் ஓபிஎஸ் நேற்று சென்னை திரும்பாமல் டெல்லியில் இருந்த படியே ஜல்லிகிகட்டு நடத்துவது குறித்து சட்டநிபுணர்களுடன் ஆலோசனை நடத்தினார்.
இதைத்தொடர்ந்து இன்று காலை டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய ஓபிஎஸ், ஜல்லிக்கட்டு நடத்த அவசர சட்டம்பிறப்பிக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
குடியரசுத்தலைவர்மற்றும் ஆளுநர் ஒப்புதல் பெறப்பட்டு, அவசர சட்டம் பிறப்பிக்கப்படும் என்றும் இது தொடர்பான சட்ட வரைவு உள்துறை அமைச்சகத்திற்கு வரைவு அனுப்பட்டுள்ளது என்றும் ஓபிஎஸ் தெரிவித்தார். இதனையடுத்து அவசரச் சட்டத்தின் சட்ட முன்வரைவுக்கு உள்துறை அமைச்சகம் ஒப்புதல் ஒப்புதல் அளித்துள்ளது, தொடர்ந்து குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டுள்ளது.
இதனிடையே கொல்கத்தா சென்றுள்ள குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி இன்று இரவு டெல்லி வருவார் என்றும் இன்று இரவோ அல்லது நாளையோ அவர் கையெழுத்து போடுவார் என்றும் தெரிகிறது.
இதையடுத்து நாளை தமிழக அமைச்சரவை கூட்டப்பட்டு அவசரச் சட்டம் நியைவேற்றப்படும் என தகவல்கள் வெளியாகியுள்ளன. இதையடுத்து கோடிக்கணக்கான தமிழர்களின் போராட்டம் ஞாயிற்றுக் கிழமையன்று நிறைவேறும்.
இதற்கு சட்ட சிக்கல் எதுவும் வராத வகையில் ஏற்கனவே உச்சநீதிமன்றம் ஒரு வாரத்திற்குள் இது தொடர்பாக தீர்ப்பு எதுவும் வழங்கப்போவதில்லை என உறுதியளித்துள்ளது. எனவே ரூட் கிளியர் ஆகிக்கொண்டே வருகிறது.
இதன் உச்சகட்டமாக மஐர மாவட்ட ஆட்சியர் வீரராகவ ராவ் இன்று அலங்காநல்லுரில் உள்ள வாடிவாசல் மற்றும் அப்பகுதியை பார்வையிட்டார்.