ஜாபர் சாதிக் விவகாரத்தில் ஞானேஷ்வர் சிங்கிற்கு எதிரான புகார்களை விசாரிக்க என்.சி.பி. அதிகாரி மணீஷ்குமார் தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது.
என்.சி.பி. துணை தலைமை இயக்குனர் ஞானேஷ்வர் சிங்கிற்கு எதிரான புகார்களை விசாரிக்க மத்திய போதைப்பொருள் தடுப்பு பிரிவு உத்தரவிட்டுள்ளது. அவரிடம் விசாரணை நடத்த மற்றொரு என்.சி.பி. அதிகாரி மணீஷ்குமார் தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது.
ஞானேஷ்வர் சிங் ஊடகங்களுக்கு பேட்டி அளிக்கும் போது அரசியல் உள்நோக்கத்துடன் நடந்து கொண்டதாக புகார் அளிக்கப்பட்ட நிலையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
undefined
பரபரப்பை ஏற்படுத்தவும் பிரபலம் அடைவதற்காகவும் ஞானேஷ்வர் சிங் அவ்வாறு நடந்துகொண்டதாகவும் மத்திய உள்துறை செயலர் மற்றும் என்.சி.பி. தலைமை இயக்குநரிடம் புகார் கொடுக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் வாக்குப்பதிவு 69.46%: தொகுதி வாரியாக முழுமையாக அறிவித்த இந்தியத் தேர்தல் ஆணையம்
கடந்த பிப்ரவரி 15ஆம் தேதி டெல்லியில் மத்திய போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் போதைப்பொருள் தயாரிக்கும் 50 கிலோ ரசாயனப் பொருட்களை பறிமுதல் செய்தனர்.
நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த வழக்கில் தமிழ்நாட்டைச் சேர்ந்த தமிழ் சினிமா தயாரிப்பாளரும் முன்னாள் திமுக நிர்வாகியுமான ஜாபர் சாதிக், முஜிபுர், முகேஷ், அசோக்குமார், சதானந்தம் ஆகிய 5 பேர் கைது செய்யப்பட்டனர்.
இந்த வழக்கு தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய மத்திய போதைப்பொருள் தடுப்புப் பிரிவு அதிகாரி ஞானேஷ்வர் சிங், ஜாபர் சாதிக் 3 ஆண்டுகளில் 3,500 கிலோ போதைப் பொருளை வெளிநாடுகளுக்கு கடத்தியிருப்பதாகத் தெரிவித்தார். போதைப்பொருள் கடத்தில் மூலம் கிடைத்த பணத்தை திரைப்படத் துறையில் முதலீடு செய்து மங்கை என்ற படத்தை எடுத்தார் என்றும் அவர் கூறினார்.
தொடர்ந்து, ஜாபர் சாதிக்கின் வீடு, அலுவலகம் மற்றும் இயக்குநர் அமீரின் வீடு உள்ளிட்ட இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சமீபத்தில் சோதனை மேற்கொண்டனர்.
ஆக்டிவா எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் எப்போது வரும்? சஸ்பென்ஸை உடைத்த ஹோண்டா நிறுவனம்!