BJP Leader Annamalai : போதைப்பொருள் வழக்கில் கடந்த சில நாட்களாக தேடப்பட்டு வந்த ஜாபர் சாதிக், ராஜஸ்தான் அருகே போதைப்பொருள் தடுப்பு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார்.
போதைப்பொருள் தடுப்பு அதிகாரிகளால் டெல்லியில் நடத்தப்பட்ட அதிரடி சோதனையில் பல கிலோக்கணக்கான ரசாயன வகை போதை பொருட்கள் கைப்பற்றப்பட்டது. இது தொடர்பாக தமிழகத்தில் மூன்று பேர் கைது செய்யப்பட்ட நிலையில், இந்த போதைப்பொருள் விவகாரத்தில் மூளையாக செயல்பட்டு வந்த ஜாஃபர் சாதிக் என்பவரை மத்திய போதை பொருள் தடுப்பு அதிகாரிகள் தேட துவங்கினர்.
இவர் திராவிட முன்னேற்றக் கழகத்தின் முன்னாள் அயலக அணி துணை அமைப்பாளராக பணியாற்றி வந்தார் என்பது தெரிய வந்தது. இதனை அடுத்து அவரை கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து திமுக விலக்கியதும் குறிப்பிடத்தக்கது. இதனையடுத்து சென்னையில் உள்ள ஜாபர் சாதிக்கு வீட்டிற்கு சீல் வைக்கப்பட்ட நிலையில் தொடர்ச்சியாக அவரைத் தேடும் பணி நடந்து வந்தது.
undefined
இந்நிலையில் அவர் ராஜஸ்தான் அருகே கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதனை தொடர்ந்து பாஜக தமிழக மாநில தலைவர் அண்ணாமலை அவர்கள் தனது கருத்தினை வெளியிட்டுள்ளார். அதில்.. "சர்வதேச போதைப்பொருள் கடத்தல் கும்பல் தலைவனான திமுக நிர்வாகி ஜாபர் சாதிக்கை, தேசிய போதைப்பொருள் தடுப்பு ஆணையம் இன்று கைது செய்துள்ளது".
"கடந்த 3 ஆண்டுகளில், பல திமுக தலைவர்களுடன் ஜாபர் சாதிக் நெருக்கமாக இருந்த நிலையில், பணமோசடி செய்ய, ஜாபர் சாதிக் எவ்வாறு அவர்களுக்கு உதவியாகச் செயல்பட்டார் என்பதைத் தெரிந்து கொள்ள வேண்டியது அவசியம்".
"விசாரணை அதிகாரிகள், முழுமையான விசாரணை மேற்கொண்டு, ஜாபர் சாதிக் தொடர்புடைய நபர்கள் அனைவரையும் கண்டறிந்து நடவடிக்கை எடுத்து, தமிழகத்தில் திமுக ஆட்சியில் மிக எளிதாகப் பரவியிருக்கும் போதைப்பொருள் விற்பனை மற்றும் பயன்பாடு தடைசெய்யப்படுவதை உறுதிசெய்யுமாறு தமிழக பாஜக சார்பாகக் கேட்டுக்கொள்கிறோம்.
போதைப் பொருள் கடத்தல் வழக்கு.. தேடப்பட்டு வந்த திமுக முன்னாள் நிர்வாகி ஜாபர் சாதிக் கைது!