அதிமுக கூட்டணியில் இதுவரை புதிய தமிழகம், புரட்சி பாராதம், அகில இந்திய பார்வர்டு பிளாக், எஸ்டிபிஐ உள்ளிட்ட கட்சிகள் இடம் பெற்றுள்ளன. மேலும், பாமக, தேமுதிகவுடன் பேச்சுவார்த்தை நடத்தியது. இதில், தேமுதிகவிடம் பேச்சுவார்த்தையில் முன்னேற்றம் ஏற்பட்டதையடுத்து விரைவில் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை அதிகாரப்பூர்வமாக நடைபெறவுள்ளது.
மக்களவை தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி அமைத்து போட்டியிட தேமுதிக முடிவு செய்துள்ள நிலையில் திடீரென புதிய நிபந்தனை ஒன்றை விதித்துள்ள எடப்பாடி பழனிசாமியை அதிர்ச்சியடைய செய்துள்ளது.
மக்களவை தேர்தல் தேதி மார்ச் 15ம் தேதி அறிவிக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்கான பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், தமிழகத்தில் திமுக அதிமுக, பாஜக, நாம் தமிழர் கட்சிகளுக்கு இடையே நான்கு முனைப்போட்டி நிலவுகிறது. திமுக கூட்டணியில் கடந்த சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்ட அதே கட்சிகளுடன் நாடாளுமன்ற தேர்தலை எதிர்கொள்ள உள்ளது. பாஜக கூட்டணியில் ஓபிஎஸ், டிடிவி.தினகரன், சமத்துவ மக்கள் கட்சி உள்ளிட்ட பல்வேறு கட்சிகளும் இடம் பெற்றுள்ளன.
இதையும் படிங்க: போதைப் பொருள் மாஃபியா.. திமுகவுக்கு தொடர்பு.. அடித்து ஆடும் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே. பழனிச்சாமி..!
இந்நிலையில், அதிமுக கூட்டணியில் இதுவரை புதிய தமிழகம், புரட்சி பாராதம், அகில இந்திய பார்வர்டு பிளாக், எஸ்டிபிஐ உள்ளிட்ட கட்சிகள் இடம் பெற்றுள்ளன. மேலும், பாமக, தேமுதிகவுடன் பேச்சுவார்த்தை நடத்தியது. இதில், தேமுதிகவிடம் பேச்சுவார்த்தையில் முன்னேற்றம் ஏற்பட்டதையடுத்து விரைவில் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை அதிகாரப்பூர்வமாக நடைபெறவுள்ளது. பாமகவிடம் பல்வேறு கட்டமாக ரகசிய பேச்சுவார்த்தை நடத்தியும் இன்னும் முன்னேற்றம் ஏற்படவில்லை. மாநிலங்களவை எம்.பி. கட்டாயம் வேண்டும் என பிடிவாதத்தில் இருப்பதால் உடன்பாடு ஏற்படாத நிலை உள்ளது.
இந்நிலையில்,தொகுதிப் பங்கீடு தொடர்பாக, அதிமுக - தேமுதிக இடையே கடந்த இரண்டு நாட்களுக்கு முன் பேச்சுவார்த்தை நடந்தது. தேமுதிக அவைத் தலைவர் இளங்கோவன், கொள்கை பரப்புச் செயலர் மோகன்ராஜ், துணைச் செயலர் பார்த்தசாரதி ஆகியோர் அடங்கிய குழுவினர், அதிமுக தலைமை அலுவலகம் சென்று அதிமுக குழுவினருடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.
கடந்த 2019 மக்களவைத் தேர்தலில், தேமுதிகவுக்கு வடசென்னை, கள்ளக்குறிச்சி, விருதுநகர், திருச்சி ஆகிய நான்கு தொகுதிகள் ஒதுக்கப்பட்டது. அதேபோல், இம்முறையும் நான்கு தொகுதிகளை ஒதுக்குவதாக அதிமுக தெரிவித்துள்ளது. தேமுதிக சார்பில் தங்களுக்கு நான்கு தொகுதிகளுடன் மாநிலங்களவை சீட் வேண்டும் என்று விடாப்பிடியாக இருந்தனர். இதற்கு அதிமுக சம்மதம் தெரிவிக்கவில்லை.
இதனிடையே சொத்துக்குவிப்பு வழக்கில் பொன்முடியின் எம்எல்ஏ பதவி பறிக்கப்பட்டு காலியானதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மக்களவை தேர்தலுடன் திருக்கோவிலூர் தொகுதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில், மாநிலங்களவை சீட் ஒதுக்கவில்லை என்றாலும் திருக்கோவிலூர் சட்டப்பேரவை தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்க வேண்டும் என்று கூறியுள்ளனர்.
இதையும் படிங்க: கரூர் மக்களவைத் தொகுதி யாருக்கு ஒதுக்க போறாங்களே தெரியல.. அதுக்குள்ள பரிசு பொருட்களை விநியோகிக்கும் திமுக!
2011 சட்டப்பேரவை தேர்தலில், திருக்கோவிலூர் தொகுதியில் அதிமுக கூட்டணியில் போட்டியிட்டு, தேமுதிக வெற்றிப் பெற்றது. அதனால் அந்த தொகுதியை ஒதுக்கி தரும்படி தேமுதிக நிர்வாகிகள் தெரிவித்தனர். இதை சற்றும் எதிர்பாராத அதிமுக நிர்வாகிகள் அதிர்ச்சியடைந்தனர். திருக்கோவிலூர் தொகுதியை தேமுதிகவுக்கு ஒதுக்கும் பட்சத்தில் வேட்பாளராக எல்.வெங்கடேசன் களமிறங்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.