அரசை விமர்சித்த அரசு பள்ளி ஆசிரியை சஸ்பெண்ட்.. ஸ்டாலினுக்கு எதிராக குமுறும் சீமான் - யார் இந்த உமா மகேஸ்வரி?

By Ansgar R  |  First Published Mar 9, 2024, 5:09 PM IST

Government Teacher Uma Maheshwari : தமிழக அரசுக்கு எதிராக சமூக வலைதளங்கள் பலவற்றில் கருத்து வெளியிட்டு வந்ததாக கூறி செங்கல்பட்டு மாவட்டம் நெல்லிக்குப்பம் அரசு மேல்நிலைப் பள்ளியை சேர்ந்த ஆசிரியை உமா மகேஸ்வரி சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


யார் இந்த ஆசிரியை உமா மகேஸ்வரி?

தமிழகத்தில் அமலில் உள்ள கல்விக் கொள்கைகள் குறித்த புரிதலை ஏற்படுத்துவதற்காக பல கட்டுரைகளை தொடர்ச்சியாக எழுதி, அதை சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வந்த செங்கல்பட்டு மாவட்டம் நெல்லிக்குப்பம் அரசு பள்ளியை சேர்ந்த ஆசிரியை தான் உமா மகேஸ்வரி அவர்கள். கல்விக் கொள்கைகளை பொருத்தவரையில் தமிழக அரசுக்கு எதிராக பல்வேறு போராட்டங்களில் இவர் பங்கேற்ற்றுள்ளார். 

Latest Videos

தொடர்ச்சியாக சமூக வலைத்தளங்களிலும் தனது எதிர்ப்பினை அவர் பல வகைகளில் பதிவிட்டு வந்துள்ளார். இந்நிலையில் பள்ளிக்கல்வி குறித்து பேஸ்புக் பக்கத்தில் சில கட்டுரைகளை அவர் எழுதியிருந்த நிலையில், அது குறித்து கல்வி அலுவலரிடம் சிலர் புகார் அளித்துள்ளனர். இதனை அடுத்து செங்கல்பட்டு மாவட்டத்தின் முதன்மை கல்வி அலுவலராக தற்போது செயல்பட்டு வரும் கற்பகம், நெல்லிக்குப்பம் அரசு மேல்நிலைப் பள்ளியில் பணிபுரிந்து வரும் பட்டதாரி ஆசிரியரான உமா மகேஸ்வரியை பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டிருக்கிறார். 

சின்னப்பிள்ளைக்கு வீடு... திமுகவின் ஸ்டிக்கர் அரசியல்... முதல்வருக்கு அண்ணாமலை பதிலடி!

மேலும் அவர் வெளியிட்ட ஒரு அறிக்கையில் ஆசிரியை உமா மகேஸ்வரி facebook மற்றும் whatsapp போன்ற சமூக வலைதளங்களில் தொடர்ந்து அரசுக்கும், பள்ளி கல்வித்துறைக்கும் எதிராக கருத்துக்களை பதிவிட்டு வந்ததால் அவர் மீது அரசு ஊழியர்களுக்கான நடத்தை விதிகளை மீறியதற்கான வழக்கின் கீழ் அவர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு அவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக கூறினார்.  

மேலும் கடந்த மார்ச் 6ஆம் தேதியில் இருந்து இந்த பணியிடை நீக்கம் செல்லுபடி ஆகும் என்றும், செங்கல்பட்டு மாவட்டத்தை விட்டு அவர் வெளியூர் செல்லக்கூடாது என்றும் உத்தரவிட்டிருந்தனர். இந்த சூழலில் ஆசிரியை உமா மகேஸ்வரியின் பணியிடை நீக்கம் குறித்து பல்வேறு கட்சியினரும் தமிழக அரசுக்கு எதிராக தங்களது எதிர்ப்பினை தெரிவித்து வருகின்றனர். 

நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளரான சீமான் வெளியிட்டிருந்த ஒரு பதிவில் "பள்ளிக்கல்வித்துறையில் செய்ய வேண்டிய சீர்திருத்தங்கள் குறித்தும், புதிய கல்விக் கொள்கையின் குறைபாடுகள் குறித்தும் தொடர்ச்சியாக குரல் எழுப்பி வந்த கல்வி செயல்பாட்டாளரும், அரசு பள்ளி ஆசிரியருமான மதிப்புக்குரிய சகோதரி உமா மகேஸ்வரியை, திமுக அரசு பணியிடை நீக்கம் செய்துள்ளதை வன்மையாக கண்டிக்கத்தக்கது".

‘கல்வி செயற்பாட்டாளர்’ உமா மகேசுவரியை திமுக அரசுப் பணியிடை நீக்கம் செய்துள்ளது எதேச்சதிகாரப்போக்கின் உச்சமாகும்!

பள்ளிக்கல்வித்துறையில் செய்ய வேண்டிய சீர்திருத்தங்கள் குறித்தும், புதிய கல்விக்கொள்கையின் குறைபாடுகள் குறித்தும் தொடர்ச்சியாகக் குரல்… pic.twitter.com/HTJEaodYg0

— செந்தமிழன் சீமான் (@Seeman4TN)

"இந்திய ஒன்றியத்தை ஆளும் பாஜக அரசு கொண்டுவந்துள்ள புதிய கல்விக் கொள்கையை விமர்சித்தார் என்பதற்காக கொடுங்குற்றம் புரிந்த கைதியை போல பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள் விசாரணை என்ற பெயரில் அலைபேசியை பறித்து வைத்துக்கொண்டு ஆசிரியர் உமா மகேஸ்வரியை மிரட்டியது எதேச்சதிகாரப்போக்கின் உச்சமாகும் என்று அவர் கடுமையாக சாடியுள்ளார். 

மாநிலங்களவை இல்லைனாலும் பரவாயில்லை! திருக்கோவிலூர் தொகுதி கொடுங்கள்! அதிமுகவுக்கு அதிர்ச்சி கொடுத்த தேமுதிக!

click me!