ஜாக்டோ ஜியோ அமைப்பு வேலை நிறுத்தம்; அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் பங்கேற்பு

First Published Aug 22, 2017, 10:54 AM IST
Highlights
Jacto Jio Strike


ஊதிய மாற்று உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஜாக்டோ - ஜியோ அமைப்பு இன்று மாநிலம் முழுவதும் ஒரு நாளை வேலை நிறுத்தப் போராட்டம் நடத்தி வருகிறது. இந்த வேலை நிறுத்தப் போராட்டத்தல் அரசு ஊழியர்கள் மற்றும் அரசு பள்ளி ஆசிரியர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

ஜாக்டோ மற்றும் ஜியோ அமைப்பைச் சேர்ந்த அரசு ஊழியர்கள், மத்திய அரசின் 7-வது ஊதியக்குழு பரிந்துரைகளை ஏற்று ஊதிய மாற்று உள்ளிட்டவைகளை அமல்படுத்த வேண்டும் என்று கோரிக்கை விடுத்திருந்தனர். 

ஊதியக் குழுவினை அமல்படுத்தும் முன்னர் 20 சதவீதம் இடைக்கால நிவாரணத் தொகையை 2016, ஜனவரி மாதம் முதல் உடனடியாக அறிவித்திட வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மாநிலம் முழுவதும் ஒருநாள் அடையாள வேலை நிறுத்தப் போராட்டம் அறிவித்திருந்தனர்.

இந்த நிலையில் இன்று ஜாக்டோ - ஜியோ அமைப்பு தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் ஒருநாள் வேலை நிறுத்தப் போராட்டத்தை தொடங்கி உள்ளனர். 

ஒருநாள் அடையாள வேலை நிறுத்தப் போரட்டத்துக்குப் பிறகும், அரசு தங்களின் கோரிக்கையை நிறைவேற்றாத பட்சத்தில் வரும் செப்டம்பர் மாதம் 7 ஆம் தேதி முதல் காலை வரையற்ற போராட்டம் நடத்தப்படும் என்று ஜாக்டோ ஜியோ அமைப்பு முடிவு செய்துள்ளது.

click me!