ஆங்கில வழிக் கல்வி கற்க திணறிய மாணவன் தூக்குப்போட்டுத் தற்கொலை; கொடைக்கானலில் சோகம்…

 
Published : Aug 22, 2017, 08:25 AM ISTUpdated : Sep 19, 2018, 01:02 AM IST
ஆங்கில வழிக் கல்வி கற்க திணறிய மாணவன் தூக்குப்போட்டுத் தற்கொலை; கொடைக்கானலில் சோகம்…

சுருக்கம்

student committed suicide to did not learn English medium education

திண்டுக்கல்

ஆங்கில வழிக் கல்வி கற்க திணறிய மாணவன் மன உலைச்சலால் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவ கொடைக்கானலில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் லாயிஸ்ட் சாலையைச் சேர்ந்தவர் மகாலிங்கம். இவருடைய மகன் சந்தோஷ்குமார் (12). இவன் கடந்தாண்டு அட்டுவம்பட்டியில் உள்ள ஒரு பள்ளியில் தமிழ்வழியில் 5–ஆம் வகுப்பு படித்தான்.

இதனைத் தொடர்ந்து 6–ஆம் வகுப்பு கொடைக்கானல் நகரில் உள்ள ஒரு தனியார் ஆங்கிலவழி கல்வி பள்ளிக் கூடத்தில் அவனுடைய பெற்றோர் சேர்த்துள்ளனர்.

தமிழ் வழியில் படித்து ஆங்கில வழியில் கல்வி கற்க முடியாமல் சந்தோஷ்குமார் திணறியுள்ளான். இதனால் மனமுடைந்த அவன் தற்கொலை செய்து கொள்ள முடிவு எடுத்து நேற்று வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் சேலையால் தூக்குப்போட்டுக் கொண்டுள்ளான்.

அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் அவனை மீட்டு கொடைக்கானல் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு அவனை பரிசோதனை செய்த மருத்துவர்கள் சந்தோஷ்குமார் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

இதுகுறித்து தகவல் அறிந்ததும் கொடைக்கானல் காவலாளர்கள் அங்கு விரைந்து வந்து, சந்தோஷ்குமாரின் உடலை கைப்பற்றி உடற்கூராய்வுக்காக அனுப்பி வைத்தனர்.

மேலும், இதுகுறித்து காவலாளர்கள் வழக்குப்பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

PREV
click me!

Recommended Stories

தவெகவில் இணைந்த நாஞ்சில் சம்பத்..! அடுத்தடுத்து மூத்த தலைவர்கள் ஐக்கியம்! விஜய் குஷி!
இந்து கோயிலை இடிக்க தீர்ப்பு கொடுக்க கோர்ட் வேண்டும்..! தீபம் ஏற்றச்சொன்னால் கோர்ட் வேண்டாமோ? அண்ணாமலை ஆவேசம்..!