
மீண்டும் பழைய ஓய்வூதியத்தை அமல்படுத்துதல், மற்றும் காலிபணி இடங்களை நிரப்ப கோரியும் கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னை தலைமைச் செயலகத்தை இன்று முற்றுகையிடப் போவதாக ஜாக்டோ ஜியோ அமைப்பினர் அறிவித்ததைத் தொடர்ந்து, பாதுகாப்புக்காக தலைமைச் செயலகத்தை சுற்றி போலீஸார் அதிகளவில் குவிக்கப்பட்டுள்ளனர்.
சென்னை வாலாஜா சாலையில் ஜாக்டோ- ஜியோ அமைப்பைச் சேர்ந்த அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் கலந்துக்கொண்ட ஆசிரிய ஆசிரியைகளை போலீசார் கைது செய்தனர்.