ஜாபர் சாதிக் வீட்டில் ஒட்டப்பட்டு இருந்த நோட்டீஸை கிழித்து அவரது தாயார் புதிய பூட்டை பூட்டி விட்டு சென்றுள்ளார்
டெல்லியில் போதைப்பொருள் தடுப்பு காவல்துறை, டெல்லி சிறப்பு காவல்துறை நடத்திய சோதனையில் 50 கிலோ ரசாயன வகை போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இந்த சம்பவத்தில் ஈடுபட்ட 3 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். அவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், கடந்த 3 ஆண்டுகளில் 3,500 கிலோ போதைப் பொருள்கள் கடத்தப்பட்டுள்ளதாகவும், அதன் மொத்த மதிப்பு ரூ. 2,000 கோடி எனவும் தெரிய வந்துள்ளது.
மேலும், இந்த போதைப்பொருள் கடத்தல் சம்பவத்தின் பின்னணியில் செயல்பட்டது திரைப்பட தயாரிப்பாளரான ஜாபர் சாதிக் என்பதும் போலீசார் நடத்திய விசாரணையில் தெரியவந்தது. அதன் தொடர்ச்சியாக, அவர் தலைமறைவாகி விட்டார். இதையடுத்து, போதை பொருள் விவகாரம் தொடர்பான ஆஜராகுமாறு ஜாபர் சாதிக் வீட்டில் சம்மன் ஒட்டப்பட்டது.
undefined
திருவேற்காடு கோயிலில் திருடிய அர்ச்சகர்: தமிழக அரசின் உண்மை சரிபார்ப்பு குழு விளக்கம்!
ஆனால், அவர் ஆஜராகததால் ஜாபர் சாதிக் வீட்டுக்கு போதைப் பொருள் தடுப்புப் பிரிவு போலீசார் சீல் வைத்துள்ளனர். மேலும், தலைமறைவாக உள்ள ஜாபர் சாதிக்கிற்கு லுக் அவுட் நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது. வெளிநாடுகளுக்கு தப்பிச் செல்வதை தடுக்கும் வகையில் மத்திய போதைப்பொருள் தடுப்பு பிரிவு போலீசார் ஜாபர் சாதிக்கிற்கு லுக் அவுட் நோட்டீஸ் பிறப்பித்துள்ளனர்.
இந்த நிலையில், ஜாபர் சாதிக் வீட்டில் ஒட்டப்பட்டு இருந்த நோட்டீஸை கிழித்து அவரது தாயார் புதிய பூட்டை பூட்டி விட்டு சென்றுள்ளார். சென்னை மயிலாப்பூர் வீட்டில் பணியாற்றிய காவலாளிகளை ஜாபர் சாதிக்கின் தாயார் திடீரென பணியில் இருந்து நீக்கியுள்ளார். நள்ளிரவில் ஆட்டோவில் வந்து நோட்டீஸை கிழித்துவிட்டு, புதிய பூட்டை பூட்டி சென்றதாக தகவல் வெளியாகியுள்ளது.