
ஜெ மரணம் குறித்து ஓய்வு பெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் விசாரணை கமிஷன் அமைத்து விசாரணை நடைப்பெற்று வருகிறது
இந்நிலையில் இது குறித்து விசாரண ஆணையத்தில் அப்போலோ மருத்துவமனை தலைமை நர்ஸ் பதில் அளித்து உள்ளார்
அப்போல்லோ மருத்துவமனையில் மருத்துவராக, பணியாற்றியவர் அர்ச்சனா மற்றும் தலைமை நர்ஸ் ரேணுகா இவர்கள் இருவரும் நேற்று ஆணையம் முன்பு ஆஜரானார்கள்.
ஆணையத்தில் நீதிபதி கேட்ட பல்வேறு கேள்விகளுக்கு மருத்துவர்அர்ச்சனா தெரியாது என்ற பதிலை மட்டுமே முன் வைத்து உள்ளார்
ஜெயலலிதா மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற வார்டில் அதிக நாட்கள் அதே வார்டில் வேளையில் இருந்தவர் இருந்தவர் மருத்துவர் அர்ச்சனா . இவருக்கு அதிகமான விவரம் தெரிய வாய்ப்பு உள்ளது என்பதற்காக இவரிடம் பல கேள்விகள் எழுப்பப்பட்டு உள்ளது
ஜெயலலிதா கை அசைத்தாரா..?
கவர்னர் வித்யாசாகரை பார்த்து ஜெயலலிதா கை அசைத்தாரா என்ற கேள்விக்கு, கண்ணாடிக்கு வெளியில் இருந்து கவர்னர் ஜெயலலிதாவை பார்த்தார். ஜெயலலிதாவும் கை அசைத்தார். ஆனால் கவர்னரை பார்த்துதான் கை அசைத்தாரா என்பது எனக்கு தெரியாது என தெரிவித்து உள்ளார்.
அன்றைய தினத்தில் மருத்துவர் அர்ச்சனா தான் அந்த வார்டில் பணியில் இருந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இது குறித்து மேலும் ஆணையம் எழுப்பிய பல கேள்விகளுக்கு அர்ச்சனா சரி வர பதில் கொடுக்கவில்லை என கூறப்படுகிறது.