பெட்ரோல், டீசல், கியாஸ் விலை உயர்வுக்கு கண்டனம் - இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சைக்கிள் ஓட்டி ஆர்ப்பாட்டம்...

 
Published : Jun 06, 2018, 01:18 PM ISTUpdated : Sep 19, 2018, 02:29 AM IST
பெட்ரோல், டீசல், கியாஸ் விலை உயர்வுக்கு கண்டனம் - இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சைக்கிள் ஓட்டி ஆர்ப்பாட்டம்...

சுருக்கம்

Petrol Diesel and gas condemned price hike Indian Democracy Youth Association bicycle demonstrated ...

சேலம் 

பெட்ரோல், டீசல், கியாஸ் விலை உயர்வைக் கண்டித்து இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் சைக்கிள் ஓட்டி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 

இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் சேலம் மாவட்ட கிளை சார்பில், நேற்று சேலம் பழைய பேருந்து நிலையம் அருகே உள்ள தலைமை தபால் நிலையம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைப்பெற்றது. 

இதற்கு மாவட்ட தலைவர் கந்தசாமி தலைமை வகித்தார். நிர்வாகிகள் சிவராஜ், பிரகாஷ், கண்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநில தலைவர் செந்தில் பங்கேற்று  கோரிக்கைகள் குறித்து பேசினார்.

இந்த ஆர்ப்பாட்டத்தில், "பெட்ரோல், டீசல், கியாஸ் விலை உயர்ந்துள்ளது. எனவே, இந்த விலை உயர்வைக் கண்டிப்பது, 

உயர்த்தப்பட்ட பெட்ரோல் - டீசல் விலையை குறைக்க வேண்டும். 

ஜி.எஸ்.டி. வரி விதிப்பில் பெட்ரோல், டீசலைக் கொண்டுவர வேண்டும்" உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் குறித்து அவர் பேசினார்.

விலை உயர்வால் பெட்ரோல் வாங்கி மோட்டார் சைக்கிள் ஓட்ட முடியவில்லை என்பதை விளக்கும் வகையில் சைக்கிள் ஓட்டி நூதன முறையில் அவர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். 

இந்த ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட செயலாளர் பிரவீன்குமார், துணை செயலாளர் கணேசன், பொருளாளர் வெங்கடேஷ் உள்பட பலர் பங்கேற்றனர். 

ஆர்ப்பாட்டத்தின் முடிவில் மாவட்ட செயற்குழு உறுப்பினர் பெரியசாமி நன்றி கூறினார். 

PREV
click me!

Recommended Stories

தவெகவில் இணைந்த பெலிக்ஸ் ஜெரால்டு! சத்தமே இல்லாமல் தட்டி தூக்கிய விஜய்! தவெகவினர் குஷி!
எப்போதும் திமுக எதிர்ப்பு திமுக வெறுப்பு, திமுக = விஜய் எதிர்ப்பு என்ற நிலை தான் இருக்கிறது