
சிவகங்கை
சிவகங்கையில் நடைபெற்ற ஐயனார் கோவில் காவடி எடுப்பு திருவிழாவில் மாட்டு வண்டி பந்தயம் சீறும் சிறப்புமாக நடைப்பெற்றது. இதில், மாட்டு வண்டிகள் றெக்க கட்டிப் பறந்தன.
சிவகங்கை மாவட்டம், கல்லல் அருகே உள்ள புளியங்குடிப்பட்டி கருங்கமுடைய ஐயனார் கோவில் காவடி எடுப்பு திருவிழா நடைப்பெற்றது. இதனையொட்டி மாட்டு வண்டி பந்தயம் நடைப்பெற்றது.
புளியங்குடிப்பட்டி – காளையார்கோவில் சாலையில் நடைபெற்ற இந்தப் பந்தயத்தில் 13 வண்டிகள் பங்கேற்றன. பெரிய மாட்டு வண்டி, சின்ன மாட்டு வண்டி என 2 பிரிவுகளாக பந்தயம் நடைபெற்றது.
முதலில் நடைபெற்ற பெரிய மாட்டு வண்டி பந்தயத்தில் முதல் பரிசை கல்லல் அழகுசுகன்யா வண்டியும், இரண்டாவது பரிசை மேலூர் மணிகண்டன் வண்டியும், மூன்றாவது பரிசை நாட்டரசன்கோட்டை ஆண்டிக்கோனார் வண்டியும் பெற்றது.
பின்னர் நடைபெற்ற சின்ன மாட்டு வண்டி பந்தயத்தில் மொத்தம் ஆறு வண்டிகள் பங்கேற்று முதல் பரிசை கொடிக்குளம் கௌதம் வண்டியும், இரண்டாவது பரிசை பாதரக்குடி முத்துமாரி வண்டியும், மூன்றாவது பரிசை சிவகங்கை அருண் வண்டியும் பெற்றது.
அதேபோல காரைக்குடி அருகே உள்ள சொக்கலிங்கம்புதூர் காமன்ராஜா கோவிலில் சித்ரா பௌர்ணமி விழாவையொட்டி மாட்டு வண்டி பந்தயம் நடைப்பெற்றது.
சொக்கலிங்கம்புதூர் – குன்றக்குடி சாலையில் நடைப்பெற்ற மாட்டு வண்டிப் பந்தயத்தில் 17 மாட்டு வண்டிகள் பங்கேற்றன. பெரிய மாட்டு வண்டி, சின்ன மாட்டு வண்டி என இரண்டு பிரிவுளாக பந்தயம் நடைப்பெற்றது.
முதலில் நடைபெற்ற பெரிய மாட்டு வண்டி பந்தயத்தில் முதல் பரிசை சொக்கலிங்கம்புதூர் காமன்ராஜா வண்டியும், இரண்டாவது பரிசை சக்தி வண்டியும், மூன்றாவது பரிசை பூவாண்டிப்பட்டி மணிகண்டன் வண்டியும் பெற்றது.
பின்னர், நடைபெற்ற சின்ன மாட்டு வண்டி பந்தயத்தில் முதல் பரிசை சொக்கலிங்கம்புதூர் சக்தி வண்டியும், இரண்டாவது பரிசை கீர்த்தணி வண்டியும், மூன்றாவது பரிசை மேலூர் தேத்தாம்பட்டி பிரசித்தேவ் வண்டியும் பெற்றது.
இறுதியில் வெற்றிப் பெற்ற வண்டிகளுக்கு பல்வேறு பரிசுகள் வழங்கி சிறப்பித்தனர்.