MK STALIN : மீண்டும் ஸ்டாலின் வெளிநாடு பயணம்.! இந்த முறை எந்த நாட்டிற்கு தெரியுமா.? சட்டசபையில் வெளியான தகவல்

By Ajmal Khan  |  First Published Jun 28, 2024, 3:30 PM IST

3 ஆண்டுகளில் 10 லட்சம் கோடி ரூபாய் அளவிற்கு முதலீடுகளை தமிழ்நாட்டிற்கு கொண்டு வந்து சாதனை படைத்துள்ளது தொழில்துறை என தெரிவித்த அமைச்சர் டி.ஆர்.பி ராஜா,  உலக முதலீட்டாளர் மாநாடு தான் இதற்கு முக்கிய காரணம் எனவும் குறிப்பிட்டார்
 


வெளிநாடு முதலீடு- தமிழக அரசு ஆர்வம்

தமிழகத்திற்கு தொழில் முதலீடுகளை ஈர்க்கும் வகையில் முதலமைச்சர் ஸ்டாலின் வெளிநாட்டிற்கு சென்று தொழிலதிபர்களை சந்தித்து தமிழகத்திற்கு தொழில் தொடங்க வரும்படி அழைப்பு விடுத்து வருகிறார். அந்த வகையில் முதலமைச்சர் ஸ்டாலின், துபாய், அபுதாபி, ஜப்பான், பிரான்ஸ் ஆகிய நாடுகளுக்கு சென்று முதலீடுகளை ஈர்த்துள்ளார். இந்தநிலையில் அடுத்தக்கட்டமாக மீண்டும் முதலமைச்சர் ஸ்டாலின் வெளிநாடுக்கு செல்ல இருப்பதாக சட்டசபையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.   சட்டப்பேரவையில் தொழில் முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத்துறை மானிய கோரிக்கை மீதான விவாதத்திற்கு பதிலுரை அளித்தஅமைச்சர் டி.ஆர்.பி. ராஜா,  மூன்று ஆண்டுகளில் 10 லட்சம் கோடி ரூபாய் அளவிற்கு முதலீடுகளை தமிழ்நாட்டிற்கு கொண்டு வந்து சாதனை படைத்துள்ளது தொழில்துறை எனவும், 

Tap to resize

Latest Videos

Sekar Babu : இந்து - இஸ்லாமியர் நட்பு.!! அறநிலையத்துறை சார்பாக புத்தகம்- பாஜகவினரை அலறவிடும் சேகர்பாபு

முதலீடு ஒப்பந்தங்கள் - 60% நடைமுறைக்கு வந்துவிட்டது

உலக முதலீட்டாளர் மாநாடு தான் இதற்கு முக்கிய காரணம் எனவும் குறிப்பிட்டார். உலக முதலீட்டாளர் மாநாட்டில் 30க்கும் மேற்பட்ட நாடுகளில் இருந்து ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டதோடு, 9 பங்குதாரர் நாடுகளும் கலந்துக்கொண்டதாகவும், 6,64,101 கோடி முதலீடுகள் ஈர்க்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டு பேசினார். முதலீட்டாளர் மாநாட்டில் பங்கேற்ற நிறுவனங்களில் 631 நிறுவனங்களுடன்  புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் போடப்பட்ட நிலையில், அவற்றில் 379 ஒப்பந்தங்கள் தற்போது ஆரம்ப நிலையில் உள்ளதாகவும், இதன் மூலம் உலக முதலீட்டாளர் மாநாட்டில் போடப்பட்ட ஒப்பந்தங்களில் தற்போது வரை 60 சதவீதம்  நடைமுறைக்கு வந்துள்ளதாகவும் தெரிவித்தார்.

மீண்டும் ஸ்டாலின் வெளிநாடு பயணம்

ஏற்கனவே வெளிநாடுகளுக்கு சென்ற முதலமைச்சர் அதிக அளவில் முதலீடுகளை ஈர்த்து வந்த நிலையில் அதன் தொடர்ச்சியாக, தொழில் முதலீடுகளை ஈர்க்க முதலமைச்சர் விரைவில் அமெரிக்கா செல்ல உள்ளதாகவும் கூறினார்.  இந்திய அளவில் அதிக தொழிற்சாலை இருக்கும் மாநிலமாக தமிழகம் திகழ்வதாகவும், ஆண்டிற்கு 10 லட்சம் என்ற அடிப்படையில் மூன்று ஆண்டுகளில் 31 லட்சம் வேலை வாய்ப்புகளை உருவாக்கி முதலமைச்சர் சாதனை படைத்துள்ளதாகவும் தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி ராஜா தெரிவித்துள்ளார்.

EPS vs Stalin : குடும்ப அட்டை ஒன்றுக்கு மாதம் 5ஆயிரம் நிவராணம் வழங்கனும்.!திமுக அரசுக்கு செக் வைத்த எடப்பாடி

click me!