தேர்தல் நடத்த 3 மாதங்கள் தேவைப்படுகிறது என்பது தேர்தல் ஆணையத்தின் திறனற்றத் தன்மையை வெளிக்காட்டுகிறது என அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் கூறியுள்ளார்.
நாடாளுமன்றத் தேர்தலை மூன்று மாதங்களாக நடத்துவது தேர்தல் ஆணையத்தின் திறனற்றத் தன்மையை வெளிக்காட்டுகிறது என அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் விமர்சனம் செய்துள்ளார்.
தமிழகத்தில் நாடாளுமன்றத் தேர்தல் வரும் 19ஆம் தேதி நடைபெற உள்ளது. பரப்புரைக்கு இன்னும் 2 வாரங்களுக்கும் குறைவாக நாள்களே உள்ளதால், அரசியல் கட்சிகளின் தேர்தல் பிரச்சாரத்தில் அனல் பறக்கிறது.
undefined
முக்கிய அரசியல் கட்சித் தலைவர்கள் தமிழ்நாடு முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு தங்கள் கட்சி வேட்பாளர்களை ஆதரித்து வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுள்ளன. பொது இடங்களில் நடைபெறும் பிரச்சாரங்களில் பல்வேறு சுவாரஸ்யமான சம்பவங்களும் நடைபெற்று வருகின்றன.
இந்நிலையில், வாக்கு சேகரிப்பின்போது தேர்தல் ஆணையத்தை விமர்சித்துப் பேசியுள்ள தமிழக தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன், "2004ஆம் ஆண்டு பொதுத் தேர்தலின்போது, 20 நாட்கள் தேர்தல் காலமாக இருந்தது. 20 வருடங்கள் கழித்து 2024-ல் தேர்தல் நடத்த 3 மாதங்கள் தேவைப்படுகிறது. இது தேர்தல் ஆணையத்தின் திறனற்றத் தன்மையை வெளிக்காட்டுகிறது" எனக் கூறியுள்ளார்.
தேர்தலைத் திறம்பட நடத்தத் தெரியாத இந்த அரசு, ஒரே நாடு ஒரே தேர்தலைக் கொண்டுவரத் திட்டமிடுகிறது என்றும் அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் குற்றம்சாட்டியுள்ளார்.
"542 தொகுதிகளுக்குத் தேர்தல் நடத்த 3 மாதங்கள் தேவைப்படுகிறது என்றால், நாடு முழுவதும் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்த 1.5 ஆண்டுகள் ஆகும்" என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் நாடாளுமன்றத் தேர்தல் வரும் 19ஆம் தேதி நடைபெற உள்ளது. பரப்புரைக்கு இன்னும் 2 வாரங்களுக்கும் குறைவாக நாள்களே உள்ளதால், அரசியல் கட்சிகளின் தேர்தல் பிரச்சாரத்தில் அனல் பறக்கிறது.
தேர்தலை ஏழு கட்டங்களாக நடத்துவது குறித்து எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சித்துள்ளன. பிரதமர் மோடியின் பிரசாரத்திற்கு சாதகமாக இருக்க வேண்டும் என்பதற்காக இவ்வாறு திட்டமிட்டிருப்பதாக குற்றம்சாட்டப்படுகிறது. நீண்ட நாட்களுக்கு இழுத்தடிப்பதால் தேர்தலில் விதிமீறல்கள் நடக்க வாய்ப்பு இருக்கிறது என்றும் எதிர்க்கட்சிகள் கவலை தெரிவித்துள்ளன.