குடும்ப தலைவிக்கு ரூ.1000 தான்... குடிச்சு செத்தால் ரூ.10 லட்சம்... கேவலம்... சீறும் சீமான்!

By SG BalanFirst Published Jun 23, 2024, 10:08 PM IST
Highlights

கள்ளக்குறிச்சி கள்ளசாராயம் குடித்து இறந்தவர்கள் குடும்பத்துக்கு அரசு அறிவித்த நிவாரணம் ஆத்திரத்தை ஏற்படுத்துகிறது என்ற சீமான் கள்ள சாராயம் குடித்து சாகிறவனை ஊக்கப்படுத்துவதா? எனவும் கேள்வி எழுப்பியுள்ளார்.

குடும்ப தலைவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் மட்டும் கொடுக்கும் நிலையில், கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து இறதந்தவர்களுக்கு ரூ.10 லட்சம் கொடுப்பது கேவலம் என சீமான் விமர்சனம் செய்துள்ளார்.

சென்னை விமான நிலையத்தில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் செய்தியாளர்களிடம் பேசினார். கள்ளக்குறிச்சி கள்ளசாராயம் குடித்து இறந்தவர்கள் குடும்பத்துக்கு அரசு அறிவித்த நிவாரணம் ஆத்திரத்தை ஏற்படுத்துகிறது என்ற சீமான் கள்ள சாராயம் குடித்து சாகிறவனை ஊக்கப்படுத்துவதா? எனவும் கேள்வி எழுப்பியுள்ளார்.

Latest Videos

சீமான் செய்தியாளர்களிடம் பேசியதாவது:

"நீட் முதுகலை தேர்வை தற்காலிகமாக தள்ளி வைத்து உள்ளனர். ஆனால் நீட்டை நிரந்தரமாக தள்ளி வைக்க வேண்டும் என வலிய்ய்றுத்தி வருகிறோம். நீட் தேர்வினால் எவ்வளவு பிரச்சனைகள் வந்து உள்ளது. நீட் தேர்வினால் போலியான மருத்துவர்களை உருவாக்குமே தவிர தரமான மருத்துவர்களை உருவாக்காது. 
 
ஒரே நாடு ஒரே தேர்தல் என்று சொல்கிறீர்கள். ஆனால் நாட்டின் மாணவர்களுக்கு தேர்வு நடத்த கூட தகுதிவில்லை. அமெரிக்காவில் உள்ள ஒரு நிறுவனம் நீட் உள்பட எல்லா தேர்வுகளை நடத்துகிறது. அமெரிக்காவில் உள்ள தனியார் நிறுவனத்திற்கு ஏன் ஒப்பந்தம் தருகிறீர்கள். 

பூமி மீது மோதப்போகும் சிறுகோள்! தேதியைக் குறித்த நாசா விஞ்ஞானிகள்! என்ன நடக்கப்போகுதோ...

ஏற்கனவே இருந்த தேர்வு முறையில் என்ன தவறு இருந்தது. தமிழ்நாட்டில் ஹெட்போன் வைத்து தேர்வு எழுதியவர்களை கண்டுபிடித்தால் கைது செய்யப்பட்டனர். இது போல் கண்டுபிடிக்காமல் எத்தனை பேர் தேர்வு எழுதி இருப்பார்கள். வட மாநிலங்களில் பிரச்சனை வந்ததும் கொந்தளிக்கிறார்கள். இவி எம் மிஷன் போல் நீட் தேர்வும் பிராடு. ஒடுக்கப்பட்ட, பிற்படுத்தப்பட்ட உழைக்கும் மக்கள் யாரும் மருத்துவ்ராக முடியாது. 

கள்ளக்குறிச்சி கள்ள சாராயம் விவகாரத்தில் சாவு அதிகமாகும். அரசு அறிவித்த நிவாரணம் குறித்து அனுதாபமோ ஆறுதல் கிடையாது. ஆத்திரம் தான் ஏற்படுகிறது. நாட்டில் அதிகமாக நிவாரணம் தந்தது சாராயம் குடித்து செத்தவர்களுக்கு தான். இது நாடா சுடுகாடா. குடிக்க வைத்து தாலி அறுப்பது தான் அரசின் கடமையா க்ள்ள சாராயம் குடித்து சாகிறவனை ஊக்கப்படுத்துவதா?

ரூ.10 லட்சம் தந்ததும் குணமாகி வீட்டிற்கு போனவன் மீச்சம் இருந்த சாராயத்தை குடித்து செத்து போகிறான். மருத்துவமனையில் சிகிச்சை பெறுகிறவனுக்கு ரூ.50 ஆயிரம் என்றதும் கள்ள சாராயம் குடிக்காமல் டாஸ்மாக்கில் சரக்கு அடித்தவன் வந்து படுத்துகிறான். உழைக்கிறவனுக்கு விவசாயத்திற்கு ஊக்கப்படுத்தவில்லை. மீன் செத்த போது வரவில்லை. எல்லையில் செத்த ராணுவத்திற்கு வரவில்லை. சாராயம் குடித்து செத்தவனுக்கு விழுந்து விழுந்து போய் பார்க்கிறீர்கள். குடும்ப தலைவிக்கு ரூ ஆயிரம் தான். குடிச்சு செத்தால் ரூ.10 லட்சம் கேவலமாக இருக்கிறது"

இவ்வாறு நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.

கல்வராயன் மலையில் கள்ளச்சாராய வேட்டைக்குச் சென்ற 7 போலீசார் மாயம்!

click me!