வெள்ள நிவராண நிதி.. ரேஷன் கடைகளில் நாளை முதல் டோக்கன் விநியோகம்.? ஞாயிற்றுக்கிழமை முதல் பணம் வழங்க ஏற்பாடு

By Ajmal KhanFirst Published Dec 13, 2023, 11:55 AM IST
Highlights

வெள்ளத்தால்  பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணத்தொகை வழங்கும் வகையில், நாளை முதல் ரேஷன் கடைகளில் டோக்கன் வழங்கப்படவுள்ளது. மேலும் வருகிற ஞாயிற்றுக்கிழமையில் இருந்து நிவாரணத்தொகை வழங்கப்பட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

வெள்ளத்தால் மக்கள் பாதிப்பு

மிக்ஜாம் புயலால் ஏற்பட்ட வெள்ளத்தால் சென்னை முழுவதுமாக பாதிக்கப்பட்டது. இதே போல திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களும் பாதிப்பை சந்தித்தது. பல இடங்களில் வீடுகளுக்குள் வெள்ள நீர் புகுந்ததால் மக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கியது. மேலும் வீடுகளில் இருந்த முக்கிய பொருட்கள் வெள்ளத்தால் சேதம் அடைந்தது. இந்தநிலையில் மக்களுக்கு நிவாரண உதவியானது தமிழக அரசு சார்பாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதன் படி வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு 6ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டது. இதே போல மனித உயிரிழப்புகள், கால் நடை உயிரிழப்பு, வீடுகள் சேதம் உள்ளிட்டவைகளுக்கும் இழப்பீடு அறிவிக்கப்பட்டது.

Latest Videos

காஞ்சிபுரத்தில் யாருக்கெல்லாம் நிதி உதவி

இந்தநிலையில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்கள் தொடர்பாக கணக்கெடுப்பு பணியானது நடைபெற்றது. இதன் படி சென்னையில் உள்ள அனைத்து மண்டலங்களிலும் வெள்ள நிவராண நிதி வழங்கப்படும் என தகவல் வெளியானது. ஆனால் செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வெள்ள நிவாரணம் வழங்குவது தொடர்பாக மாவட்ட ஆட்சியர்கள் முடிவு செய்வார்கள் என கூறப்பட்டது. இந்தநிலையில்,

காஞ்சிபுரம் மாவட்டத்தில் குன்றத்தூர் பகுதியில் வசிப்பவர்களுக்கும், ஸ்ரீபெரும்பத்தூரில் 3 கிராமங்ளுக்கு ( மேவலூர் குப்பம், சிவந்தாங்கல், கட்சிப்பட்டு ) மட்டும் நிவாரணம் வழங்க திட்டமிடப்படுள்ளதாக கூறப்படுகிறது. மேலும்  காஞ்சிபுரம், வாலாஜாபாத், உத்திரமேலூர் பகுதியில் வசிப்பவர்களுக்கு நிவாரணம் இல்லையெனவும், மொத்தமாக காஞ்சிபுரம் மாவட்டத்தில் 1 லட்சத்து 35 ஆயிரம் கார்டுகளுக்கு வழங்க திட்டமிடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. 

நாளை முதல் டோக்கன்.?

இந்தநிலையில், மிக்ஜாம் புயல் நிவாரண தொகைக்கான டோக்கன் நாளை முதல்  ரேஷன் கடைகளில் விநியோகம் செய்யப்படும் என தகவல் வெளியாகியுள்ளது. மேலும்  ஞாயிற்றுக்கிழமை முதல் பணம் வழங்க திட்டமிடப்பட்டுள்ளதாகவும், இதில் வருமான வரி செலுத்துபவர்களுக்கு நிவாரண உதவி கிடையாது என கூறப்படுகிறது. வருமான வரி செலுத்துபவர்களில் நடுத்தர குடும்பத்தை சார்ந்தவர்கள் இருந்தால் அவர்கள் தகுதியானவர்கள் என எண்ணினால் அவர்களுக்கு நியாயவிலைக் கடைகள் மூலம் விண்ணப்பம் விநியோகம் செய்யப்படும். விண்ணப்பித்தால் அதிகாரிகள் ஆய்வு செய்து அவர்களுக்கு நிவாரணம் வழங்குவது குறித்து பரிசீலிக்கப்படும் என அரசு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 

இதையும் படியுங்கள்

காமாலை பிடித்தவருக்கு கண்டெதெல்லாம் மஞ்சள்.. எல்லாத்திற்கும் அரசியல் சாயம் பூசும் அண்ணாமலை- சீறும் சேகர்பாபு

click me!