பாஜக மாநில தலைவர் அண்ணாமலை ஆகஸ்ட் மாதம் லண்டனில் படிக்க செல்ல இருப்பதால் தமிழகத்திற்கு புதிய பாஜக தலைவரை நியமிக்க தேசிய தலைமை திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதற்கான அறிவிப்பு இந்த மாதம் மத்தியில் வெளியாகும் என கூறப்படுகிறது.
அண்ணாமலையும் பாஜக தலைமையும்
தமிழகத்தில் திமுக மற்றும் அதிமுகவிற்கு டப் கொடுக்கும் அளவிற்கு பாஜகவிற்கு வளர்ச்சியை ஏற்படுத்திக்கொடுத்தவர் அண்ணாமலை, பிரதமர் மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா உள்ளிட்டவர்கள் அண்ணாமலை மீது அதிகளவு நம்பிக்கை வைத்துள்ளனர். இதன் காரணமாகவே அதிமுகவுடன் கூட்டணி முறிவு ஏற்பட்ட போதும் அண்ணாமலை மீது தேசிய தலைமை எந்த வித நடவடிக்கையும் எடுக்கவில்லை, இதே போல தமிழகத்தில் 40 இடங்களிலும் பாஜக தோல்வி அடைந்த போதும் தேசிய தலைமை அண்ணாமலைக்கு உறுதுணையாக இருந்தது. இதனால் பாஜக மூத்த தலைவர்களே அண்ணமலை மீது பயத்தில் உள்ளனர்.
லண்டன் செல்லும் அண்ணாமலை
இதனையடுத்து வருகிற 2026ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலை குறிக்கோளாக வைத்து அண்ணாமலை செயல்பட்டு வரும் நிலையில், திடீரென அரசியலுக்கு தற்காலிக ஓய்வு கொடுத்து விட்டு அண்ணாமலை லண்டனில் படிக்க செல்ல இருப்பதாக தகவல் வெளியானது. இது தொடர்பாக பாஜக வட்டாரத்தில் விசாரித்த போது, இங்கிலாந்தில் உள்ள ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் 'சர்வதேச அரசியல்' என்ற தலைப்பில் ஆண்டு தோறும் சான்றிதழ் படிப்புக்காக, இந்தியாவில் உள்ள முக்கிய 12 அரசியல் தலைவர்களை அழைப்பு விடுக்கிறது. அந்த வகையில் பாஜக மாநில தலைவர அண்ணாமலை தேர்வாகியுள்ளார். எனவே இந்த படிப்பிற்காக ஆகஸ்ட் மாதம் முதல் ஜனவரி மாதம் வரை அண்ணாமலை லண்டனில் தங்கி படிக்க வேண்டிய நிலை உள்ளது. எனவே தற்போது தமிழக அரசியலில் பெரிய அளவில் தேர்தல் இல்லாத நிலையில் அண்ணாமலை லண்டன் செல்ல முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.
புதிய மாநில தலைவர் யார்.?
இதன் காரணமாக 4 மாதங்கள் தமிழக பாஜகவிற்கு தலைவர் பதவி காலியாக இருக்கும் என கூறப்படுகிறது. இந்தநிலையில் தமிழக பாஜகவில் மாநில தலைவர் பொறுப்புக்கு புதிதாக ஒருவரை தற்காலிகமா நியமிக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து தேசிய தலைமை யாரை அடுத்த பாஜக மாநில தலைவராக நியமிக்கலாம் என ஆலோசனையை தொடங்கியுள்ளது. அந்த லிஸ்ட்டில் தமிழிசை, வானதி சீனிவாசன், நயினார் நாகேந்திரன் ஆகியோரில் ஒருவரை தமிழக பாஜகவின் புதிய தலைவராகவோ அல்லது பொறுப்பு தலைவராகவோ நியமிக்கப்பட இருப்பதாக கூறப்படுகிறது. இதற்கான அறிவிப்பு ஆகஸ்ட் மாதம் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
New Criminal Law : இன்று அமலானது புதிய குற்றவியல் சட்டம்..! சிறப்பம்சம் என்ன.? பாதிப்பு என்ன.?