
நீலகிரி மாவட்டம் முதுமலை அருகே முதுகுளி பகுதியை சேர்ந்த சிவபிரகாசம் என்பவரின் வீட்டின் அருகே பாதி எரிந்த மனிதன் போலவும், ரெட்டை கொம்பு மற்றும் மார்பில் அகல் விளக்கு போன்ற அமைப்புடனும் விநோத உயிரினம் ஒன்று கடந்த வியாழன்று மாலை வந்த விவகாரத்தை நேற்றே நமது ஏஸியா நெட் தமிழ் இணைய தளத்தில் எழுதியிருந்தோம்.
கூடலூர் தாசில்தார் சிவகுமார் சம்பவ இடத்தில் விசாரித்துவிட்டு ’இது குறித்து ஆய்வு செய்ய வனத்துறையிடம் சொல்லப்பட்டுள்ளது.’ என்றார். வனத்துறையினரும் வந்து விசாரித்துவிட்டு சிவபிரகாசத்தின் வீட்டருகே இரண்டு கேமெராக்களை பொருத்திவிட்டு நகர்ந்தனர்.
இந்நிலையில் அந்த விநோத உயிரினத்தின் போட்டோவை ஆராய்ந்த வனத்துறை ஆராய்ச்சி மையத்தின் வல்லுநர்கள் “தமிழகம் மற்றும் கேரள வனங்கள் அடுத்தடுத்து அமைந்திருக்கும் பகுதிதான் இந்த கூடலூர் வனப்பகுதி. தமிழக வனப்பகுதியில் மட்டும் பெரிய அளவில் தோற்றம் கொண்ட ‘மாத்’ வகை பூச்சியினம் 1000 வகைகள் உள்ளது. அதில் ஒன்றுதான் ‘டெட்ஸ் ஹெட் ஹாக்’ எனும் மாத் பூச்சி. அது ஏதோ மரப்படையிலோ அல்லது கட்டையிலோ அமர்ந்திருப்பதை பார்த்துவிட்டு மக்கள் குழம்பியிருக்கலாம்.’ என்று சொல்லியுள்ளனர்.
ஆராய்ச்சி மையத்தில் இருந்து வல்லுநர்கள் கூறிவிட்டாலும் கூட மேற்படி வன ஸ்பாட்டில் வசிக்கும் மக்கள் இன்னமும் பயத்தில் மண்டை காய்ந்துதான் கிடக்கிறார்களாம்.
அவ்வ்வ்வ்வ்!....