
முதல்வரை டிஜிபி ராஜேந்திரன் இன்று காலை சந்தித்ததை அடுத்து ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம் வருவது உறுதியாகியுள்ளது.
சென்னையில் அதிகபட்சமாக பல முக்கிய தலைகள் உருள உள்ளதாக காவல்துறை வட்டாரங்கள் தெரிவிக்கிறது.
டிஜிபி மாற்றம் என்ற பரபரப்பு நிலவி வந்த வேளையில் இன்று மதியத்துக்குள் டிஜிபி நியமனம் வந்து விடும்.அதை தொடர்ந்தும் அடுத்தடுத்து பரபரப்பு செய்திகள் உள்ளது.
புதிதாக டிஜிபி நியமனத்தையடுத்து இன்று மதியம் அல்லது மாலையில் பெரிய அளவிலான ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம் வரவுள்ளது.
சுமார் 70 முதல் 80 ஐபிஎஸ் அதிகாரிகள் இடம் மாற்றப்பட உள்ளனர்.
இந்த அறிவிப்பு இன்று வெளியாகும் பட்சத்தில் அதுவும் பரபரப்பான செய்தியாக மாறும்.
இந்த மாற்றத்தில் சென்னையிலும் பெரிய அளவில் இடமாறுதல் இருக்கும் என காவல் துறை வட்டாரங்கள் தெரிவிக்கிறது.
அப்பால் பெரியத் தலைகள் உருளப்போவது நிச்சயம்.