
தமிழகத்தில் 17 ஐ.பி,எஸ்., அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.இவர்களில் சிறைத்துறை ஏ.டி.ஜி..யாக சைலேந்திரபாபு, சி.பி.சி.ஐ.டி. ஏ.டி.ஜி.யாக ஜெயந்த் முரளியும் நியமிக்கப்பட்டுள்ளனர். நீண்ட நாட்களாக சஸ்பெண்ட் பண்ணப்பட்டிருந்த ஜாபர் சேட்டும் , போலீஸ் அகாடமியின் திட்ட அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார்.
தமிழக ஐபிஎஸ் அதிகாரியான காந்திராஜன், மாநில மனித உரிமை ஆணையராகவும், ஜாங்கிட், பொருளாதார குற்றப்பிரிவு ஏ.டி.ஜி.பி.,யாக வும், ஜெயந்தி முரளி, சி.பி.சி.ஐ.டி., ஏ.டி.ஜி.பி.,யாகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
திமுக ஆட்சியின்போது முதலமைச்சர்க இருந்த கருணாநிதிக்கு மிக நெருக்கமானவர் என கூறிப்படும் ஜாபர் சேட் , ஜெயலலிதா அரசால் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். நீண்ட நாட்களாக பதவிய்ல இல்லாமல் இருந்த ஜாபர் சேட் தமிழ்நாடு போலீஸ் அகாடமி ஏ.டி.ஜி.பி.,யாக நியமிக்கப்பட்டுள்ளார்.
இதே போல் கந்தசாமி, விஜயகுமார், சங்கர் ஜிவால், ராஜேஸ் தாஸ், மாஹாலி, ஷகில் அக்தர், பிரதீப் பிலிப், தமிழ்செல்வன், ஆபாஷ் குமார், அம்ரேஷ் பூஜாரி, சாரங்கன், சங்கர் உள்ளிட்ட ஐவிஎஸ் அதிகாரிகளும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.