சென்னையில் மீண்டும் தொடங்கியது பன்னாட்டு விமான சேவை... டிக்கெட் விலை உயர்வு!!

Published : Mar 27, 2022, 04:17 PM IST
சென்னையில் மீண்டும் தொடங்கியது பன்னாட்டு விமான சேவை... டிக்கெட் விலை உயர்வு!!

சுருக்கம்

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த 2020 ஆம் ஆண்டு மார்ச் 23 ஆம் தேதி முதல் பன்னாட்டு விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டன. 

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த 2020 ஆம் ஆண்டு மார்ச் 23 ஆம் தேதி முதல் பன்னாட்டு விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டன. பின்னர் 2020 ஜூன் மாதம் முதல் சில குறிப்பிட்ட நாடுகளுக்கு ஏர் பாபுல் எனப்படும் பயணிகள் உரிமை கோர முடியாத நிலையில் விமானங்கள் இயக்கப்பட்டு வருகின்றன. தற்போது இந்தியாவில் கொரோனா தொற்று குறைந்து வருவதை அடுத்து மீண்டும் மார்ச் 27 ஆம் தேதி முதல் பன்னாட்டு விமான சேவை தொடங்கும் என மத்திய விமான போக்குவரத்துத்துறை அமைச்சகம் அறிவித்தது. இதனை அடுத்து சென்னை விமான நிலையத்தில் 2 ஆண்டுகளாக முழுமையாக செயல்படாமல் கிடந்த பன்னாட்டு சேவை பிரிவு மீண்டும் விறுவிறுப்பாகியுள்ளது. அங்கு முடங்கிக்கிடந்த பிரிவுகள் அனைத்தும் சுத்தப்படுத்தப்பட்டு பயணிகள் புறப்பாடு, மற்றும் வருகைக்கான ஏற்பாடுகள் தயார் நிலையில் உள்ளன.

பன்னாட்டு விமான செலவை மீண்டும் தொடங்கினாலும் சென்னையை பொறுத்தவை கொரோனாவுக்கு முந்தைய நிலையை அடைய இன்னும் 2 முதல் 3 மாதங்கள் ஆகும் என விமான பயணத்துக்கான டிராவல்ஸ் நிறுவனத்தினர் தெரிவிக்கின்றனர். உக்ரைன் போர் முடிவுக்கு வராத நிலை சீனா தென்கொரிய போன்ற நாடுகளில் மீண்டும் அதிகரிக்கும் கொரோனா தொற்று ஆகியவை இதற்க்கு காரணம் என்கின்றனர். சில குறிப்பிட்ட நாடுகள் விசா நடைமுறைகளை இன்னும் துவங்காத நிலை உள்ளதையும் சுட்டி காட்டுகின்றனர். காதர், எமிரேட், சிங்கப்பூர், மற்றும் இலங்கை ஏர்லைன்ஸ் நிறுவனங்கள் பன்னாட்டு சேவை அளிக்க முன்வந்துள்ளன.

அதே நேரத்தில் பாலைநிறுவங்கள் தங்கள் விமான சேவையை சென்னையில் இருந்து மீண்டுமதுவங்குவது குறித்து இதுவரை எந்த தகவலும் இல்லை எனவும் டிராவல்ஸ் ஏஜென்ட்கள் கூறுகின்றனர். ஏர் இந்திய நிறுவனத்தை டாடா நிறுவனம் வாங்கிய பிறகு சுமார் 25 விமானங்களை புதுப்பிக்கும் பணிக்கு அனுப்பி இருப்பதாக கூறப்படுகிறது. இதனால் வெளிநாடுகளுக்கான ஏர் இந்திய விமானங்களும் குறைந்த எண்ணிக்கையில் இருப்பதால் மற்ற விமானங்களில் பயணக்கட்டணம் கிடுகிடுவென உயர்ந்து காணப்படுகிறது. சென்னையை பொறுத்தவரை ஞாயிறு முதல் பன்னாட்டு விமான சேவை துவங்கினாலும், கொரோனாவுக்கு முந்தைய நிலை திரும்ப ஜூன் மாதம் வரை ஆகலாம் என்ற நிலையே உள்ளது.

PREV
click me!

Recommended Stories

செந்தில் பாலாஜிக்கு பெரும் நிம்மதி..! உச்சநீதிமன்றம் முக்கிய உத்தரவு..! முழு விவரம்!
வெண்டிலேட்டடிரிலும் வீராப்பு காட்டும் காங்கிரஸ்..! போக்கிடமின்றி துர்பாக்கியத்தில் மாநிலக் கட்சிகள்..! சுக்குநூறாக உடையும் இண்டியா கூட்டணி..!