Tamilnadu Rains : கொளுத்துற வெயிலுக்கு ‘சூப்பர்’ நியூஸ்.. தமிழகத்தில் 2 நாட்களுக்கு மழை பெய்யும் !!

By Raghupati RFirst Published Mar 27, 2022, 1:01 PM IST
Highlights

தமிழகத்தில் இடி மின்னலுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இன்று மழைக்கு வாய்ப்பு :

இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள் அறிக்கையில், உள்தமிழக பகுதியின் மேல் நிலவும் வளி மண்டல கீழடுக்கு சுழற்சி மற்றும் வெப்பசலனம் காரணமாக இன்றும் நாளையும் கன்னியாகுமரி, திருநெல்வேலி அதனை ஒட்டிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

வரும் 29-ம் தேதி டெல்டா மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் எனவும், அதிகபட்ச வெப்பநிலை 35 டிகிரி செல்சியஸ் வரையும் குறைந்தபட்ச வெப்பநிலை 27 டிகிரி செல்சியஸை ஒட்டி  இருக்கக்கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

அதிக மழை பெய்த இடங்கள் :

கடந்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில் அதிகபட்சமாக  தேக்கடி (தேனி), ராசிபுரம் (நாமக்கல்) தலா 3 செண்டி மீட்டர் மழையும், சோலையார் (கோயம்புத்தூர்), சாந்தி விஜயா பள்ளி (நீலகிரி), சந்தியூர் கேவிகே (சேலம்) தலா 2 செண்டி மீட்டர் மழையும் பதிவாகியுள்ளது. மீனவர்களுக்கான எச்சரிக்கை எதுவும் வழங்கப்படவில்லை. 

click me!