"பொதுமக்கள் கவனத்திற்கு..!" பயப்படாதீங்க.. வழக்கம் போல பஸ்கள் ஓடும் - அமைச்சர் சொன்ன குட் நியூஸ் !

Published : Mar 27, 2022, 09:20 AM IST
"பொதுமக்கள் கவனத்திற்கு..!" பயப்படாதீங்க.. வழக்கம் போல பஸ்கள் ஓடும் - அமைச்சர் சொன்ன குட் நியூஸ் !

சுருக்கம்

இந்தியாவில் வருகின்ற 28,29 ஆகிய தேதிகளில் பொது வேலைநிறுத்தங்கள் நடைபெற உள்ளது. அதற்கு பல கட்சிகளும் ஆதரவு தெரிவித்து வருகின்றனர். ஆனால் தமிழகத்தில் இந்த இரண்டு நாட்கள் அரசு பஸ்கள் இயங்குமா என்பதை போக்குவரத்து துறை அமைச்சர் விளக்கம் அளித்து இருக்கிறார்.

நாட்டில் கடந்த இரு ஆண்டுகளாக கொரோனா தொற்றின் தாக்கம் அதிகமாக இருந்த காரணத்தால் அனைத்து மாநிலங்களிலும் ஊரடங்கு போடப்பட்டு மிகவும் பாதுகாத்து வந்தனர். மேலும் இந்த நேரத்தில் மக்கள் வீட்டை வெளியே வர தடை விதிக்கப்பட்டு இருந்தது. இது தவிர திருவிழாக்கள், பொதுக் கூட்டங்கள் மற்றும் போராட்டங்கள் என அனைத்தும் தடை விதிக்கப்பட்டு இருந்தது. அதனால் மக்களும் அமைதி காத்து வந்தனர். 

வேலை நிறுத்தம் :

ஆனால் தற்போது சென்ற வருடம் இறுதியில் கொரோனாவின் மூன்றாவது அலை குறைந்த நிலையில் நாடு முழுவதும் பல தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளது. தற்போது இந்தியளவில் மத்திய அரசு ஊழியர்கள் சார்பில் வேலை நிறுத்தப் போராட்டம் வருகின்ற மார்ச் 28, 29 ஆகிய தேதிகளில் நடைபெற இருப்பதாக தெரிவித்து உள்ளனர்.  இந்த வேலை நிறுத்தத்தில் மத்திய, மாநில அரசு ஊழியர்கள் பங்கேற்பதால் அரசு பணிகள் கடுமையாக பாதிக்கக் கூடும் என்பதால் பணிக்கு வராவிட்டால் சம்பளம் பிடித்தம் செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 

தமிழகத்தில் பேருந்துகள் ஓடாது :

தமிழகத்தில் வருகிற ( மார்ச் ) 28, 29 ஆகிய தேதிகளில்  12 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி அனைத்து தொழிற்சங்கங்கள் சார்பில் பொது வேலைநிறுத்தப் போராட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.  இந்த வேலைநிறுத்த போராட்டத்திற்கு  போக்குவரத்து தொழிற்சங்கமும் ஆதரவு தெரிவித்துள்ளது. இதனால் பேருந்துகள் இயங்காதோ என்கிற அச்சம் பொதுமக்களிடையே எழுந்தது.

அமைச்சர் ராஜகண்ணப்பன் :

இந்நிலையில் மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த போக்குவரத்துத் துறை அமைச்சர்,  ‘மார்ச் 28, 29 ஆகிய தேதிகளில் நாடு தழுவிய அளவில் பொது வேலைநிறுத்த போராட்டம் நடைபெற உள்ளது என்றும்,  இதனை போக்குவரத்து தொழிலாளர்கள் ஆதரிக்கின்றனர். மக்களுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் 2 நாட்களும் பேருந்துகள் இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு இருக்கிறது.

பெட்ரோல், டீசல் விலை உயர்வால் அரசு போக்குவரத்து கழகத்திற்கு பாதிப்பு இல்லை.  இந்தியன் ஆயில் கார்ப்பரேசன் நிறுவனத்தில் இருந்து அந்தந்த போக்குவரத்து பணிமனைகளுக்கு   நேரடியாக சில்லறை விற்பனையில் டீசல் கொள்முதல் செய்து நிரப்பப்படுகிறது. இலவச பயண சலுகையை பயன்படுத்தி  62% பெண்கள் அரசு பேருந்துகளில் பயணம் செய்து வருகிறார்கள்’ என்று கூறினார்.

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

சுய விளம்பரத்தில் திளைக்கும் முதல்வரே... இருக்கப் போகும் 4 மாதங்களிலாவது கவனம் செலுத்துங்கள்..! க்ரைம் பட்டியலை அடுக்கிய இபிஎஸ்..!
முக்தாரை உடனடியா கைது செய்யுங்க.. தமிழகத்தில் போராட்டம் வெடிக்கும்.. அரசுக்கு சரத்குமார் எச்சரிக்கை