நெல்லை மாவட்டம் நாங்குநேரியில் உள்ள டாஸ்மாக் மதுபானக் கடையில் விற்கப்பட்ட மது பாட்டிலில் பூச்சி இறந்து கிடந்ததால் மது பிரியர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
நெல்லை மாவட்டம் நாங்குநேரியில் உள்ள டாஸ்மாக் மதுபானக் கடையில் விற்கப்பட்ட மது பாட்டிலில் பூச்சி இறந்து கிடந்ததால் மது பிரியர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
நெல்லை மாவட்டம் நாங்குநேரியில் டாஸ்மாக் மதுபான கடை செயல்பட்டு வருகிறது. அந்த கடையில் அதே பகுதியை சேர்ந்த கூலி தொழிலாளி ஒருவர் இன்று வேலை முடிந்து வீடு திரும்பியவுடன் குடிப்பதற்கு மது பாட்டில் ஒன்றை வாங்கி வந்துள்ளார். பாட்டிலைத் திறந்து குடிப்பதற்காக மதுவை டம்ளரில் ஊற்றிய போது அதில் கருப்பு நிற துகள்கள் கலந்திருப்பதை அறிந்தார்.
இதனை அடுத்து சந்தேகம் அடைந்தவர் பாட்டிலில் மீதி உள்ள மதுபானத்தை சோதித்த போது அதில் இறந்து சிதைந்து போன பூச்சியின் உடல் பாகங்கள் மிதந்து கொண்டிருந்தது கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதனை அடுத்து மீண்டும் மதுபான கடைக்குச் சென்று அந்த பாட்டிலுக்கு பதிலாக வேறு பாட்டில் தருமாறு கேட்டார்.
வெட்கமே இல்லாத ஒருவரால் தான் இப்படி பேச முடியும்: பிரதமருக்கு மனோ தங்கராஜ் பதில்!
அதற்கு பாட்டில் திறக்கப்பட்டு விட்டதால் மாற்றி மாட்டோம் என ஊழியர்கள் மறுத்துள்ளனர். இதனால் மிகவும் வேதனை அடைந்த அந்த கூலி தொழிலாளி அதிக விலை கொடுத்து வாங்கி வந்தும் அதனை குடிக்க முடியாத அளவுக்கு சுகாதாரக் கேடு விளைவிக்கும் வகையில் தரமற்ற முறையில் இருப்பதாக தெரிவித்தார்.
மேலும் தரமான மது பானங்களை விற்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்தினார். டாஸ்மாக் மது பாட்டிலில் இறந்த பூச்சியின் உடல் சிதைந்து கிடந்த சம்பவம் அப்பகுதி மது பிரியர்களிடையே அச்சத்தையும் பரபரப்பை ஏற்படுத்தியது.
அடிக்கடி வந்து புலம்பும் மோடி... தகுதிக்கு ஏற்ப பேசுகிறாரா?: பதிலடி கொடுத்த டி.ஆர்.பாலு!