ஓரின சேர்க்கையால் நடந்த விபரீதம்... படுக்க வர மறுத்த நண்பனை கொன்று இளைஞன் தற்கொலை!

 
Published : Jun 05, 2018, 03:34 PM ISTUpdated : Sep 19, 2018, 02:29 AM IST
ஓரின சேர்க்கையால் நடந்த விபரீதம்... படுக்க வர மறுத்த  நண்பனை கொன்று இளைஞன் தற்கொலை!

சுருக்கம்

Injury caused by homosexuality is killing a friend and commits suicide

பல வருடங்களாக நெருங்கிய நண்பர்களாக இருந்து வந்ததும், அந்த நட்பு நாளடைவில் ஓரின சேர்கையாளர்களாக இருந்த நிலையில் நண்பனை கொன்றுவிட்டு தானும் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை பெரம்பூரில் வசித்து வருபவர் ஜெயின்தாகா. வட மாநிலத்தை சேர்ந்த இவர், பல வருடங்களுக்கு முன்பு சென்னைக்கு வந்து சிந்தாதிரிப்பேட்டை ரிச்சி தெருவில் உள்ள ஒரு கடையில் வேலை பார்த்து வந்தார்.

இந்தக் கடை ஊழியர் ஷாலினி, நேற்று காலை 11 மணியளவில் வந்து கடையை திறந்துள்ளார். அப்போது, அந்த கடையில் வேலைப் பார்த்து வந்த சரவணன் தூக்கில் தொங்கிய படி பிணமாக கிடந்தார். இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த ஷாலினி கீழே ஓடிவந்து அக்கம் பக்கத்தில் உள்ள கடைக்காரர்களிடம் கூறினார். உடனே அவர்கள் ஓடிசென்று பார்த்தபோது, சரவணன் மட்டுமல்லாது, கடையில் இருந்த பாத்ரூமில் மற்றொரு வாலிபர் கழுத்தறுக்கப்பட்டு பிணமாக கிடந்தார்.

தகவலறிந்து வந்த போலீசார், அந்த 2 வாலிபர்களின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர், மேலும் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதில், தூக்கில் பிணமாக தொங்கிய நபர், சிந்தாதிரிப்பேட்டையில் சரவணன் என்பதும், பாத்ரூமில் கழுத்தறுக்கப்பட்டு பிணமாக கிடந்த நபர், அதேபகுதி வசிக்கும் பார்த்தசாரதி மகன் பிரபு என்பதும் தெரிந்தது.

மேலும், பிரபுவும் கடந்த சில வருடங்களுக்கு முன்பு அதே கடையில் வேலை பார்த்து வந்ததும் தெரியவந்தது. அதைத் தொடர்ந்து போலீசார் நடத்திய விசாரணையின் போது, சரவணனும், பிரபுவும் பல வருடங்களாக நெருங்கிய நண்பர்களாக இருந்து வந்ததும், அந்த நட்பு நாளடைவில் ஓரின சேர்கையாளர்களாக மாறியதும் தெரியவந்தது. இந்த நிலையில், அவர்கள் இருவரும் கடந்த ஒன்றரை வருடங்களுக்கு முன்பு ஓரின சேர்க்கையில் ஈடுபட்ட போது, சிலர் பார்த்து கண்டித்ததாக கூறப்படுகிறது. அன்று முதல் பிரபு வேலைக்கு வரவில்லை எனக் கூறப்படுகிறது.

பிரபு வேலையை விட்டு செல்லும் போது, அந்த கடையில் ஒரு சாவியை எடுத்து சென்றுள்ளார். அதை வைத்து கொண்டு சரவணனும், பிரபுவும் அவ்வப்போது அந்த கடையின் உரிமையாளருக்கு தெரியாமல் கடையை திறந்து சந்தித்து வந்துள்ளனர். இந்த நிலையில் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு பிரபுவுக்கும், சரவணனுக்கும் தகராறு ஏற்பட்டு, இருவரும் பேசாமல் இருந்துள்ளனர். இதனால், நேற்று முன்தினம் இரவு சரவணன், பிரபுவை போனில் தொடர்பு கொண்டு ‘தான் கடையில் இருப்பதாகவும், உன்னிடம் பேச வேண்டும்.

அதனால், இரவு 11 மணிக்கு மேல் நீ கடைக்கு வா’ எனக் கூறியதாக கூறப்படுகிறது. உடனே பிரபு தான் வைத்திருந்த ஒரு சாவியை எடுத்துக்கொண்டு, கடைக்கு வந்துள்ளார். பின்னர் அவர்கள் இருவரும் கடையை திறந்து உள்ளே சென்று கடையை உள்பக்கமாக பூட்டி கொண்டு இருவரும் மது அருந்தி உள்ளனர். தன்னோடு படுக்க வராததால்  ஆத்திரம் அடைந்த சரவணன், கடையில் இருந்த கத்தியை எடுத்து பிரபுவை கழுத்தறுத்து கொலை செய்துள்ளார். பின்னர் தானும் தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. 

PREV
click me!

Recommended Stories

நான் மதுரை கமிஷனராக இருந்திருந்தால்! CM ஸ்டாலினுக்கு மெயில் அனுப்பிவிட்டு! பொன் மாணிக்கவேல் பரபரப்பு
சாலையில் சென்ற பெண் மீது மோதி! அடுத்த நொடியே கவிழ்ந்த ஆட்டோ! பயணிகள் நிலை என்ன? பதற வைக்கும் வீடியோ!