
நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகியுள்ள காலா திரைப்படத்துக்கு வரவேற்பு குறைந்துள்ளதாகவும், டிக்கெட் விற்பனை மந்தமாக உள்ளதாகவும் கூறப்படுகிறது.
பா.ரஞ்சித் இயக்கத்தில், ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகியுள்ள காலா திரைப்படம் நாளை மறுநாள் ரிலீஸ் செய்யப்பட உள்ளது. ரஜினிகாந்த் - பா.ரஞ்சித்
கூட்டணியில் உருவாகும் இரண்டாவது திரைப்படம் என்பதால் மிகப்பெரும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. ரஜினிகாந்த் நடித்து வெளியாகும் படங்களுக்கு
ரசிகர்களிடையே ஆரம்ப கால வரவேற்பு மிக அதிகமாக இருக்கும்.
டிக்கெட்டுகள் விற்பனை ஆகி விடும். ஆனால், இதுவரை முதல் இரு நாட்கள் மட்டுமே டிக்கெட்டுகள் விற்பனை ஆகியுள்ளன.
மேலும், வார இறுதி நாட்களான சனி மற்றும் ஞாயிற்று கிழமைகளுக்கான டிக்கெட்டுகள் இன்னும் முழுமையாக விற்பனை ஆகவில்லை. பல தியேட்டர்களில் காலா படத்துக்கான முன்பதிவு முழுமையாக முடிவடையவில்லை.
செய்தியாளர்கள் சந்திப்பின்போது, ரஜினி ஒருமையில் பேசியது தொடர்பாக அவர் மீது செய்தியாளர்கள் அதிருப்தியில் இருந்து வருகின்றனர். மேலும், டிக்கெட் விலை உயர்வு, பள்ளிகள் திறப்பு, கல்லூரிகள் திறப்பு என இருப்பதால் டிக்கெட் விற்பனையில் மந்தம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. காலா படத்துக்கான டிக்கெட் விற்பனை விரைவில் அதிகரிக்கக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில், ஒரு லட்சம் ரூபாய்க்கு காலா படத்துக்கு டிக்கெட் வாங்கி கொடுத்து, மக்களை படம் பார்க்க தியேட்டருக்கு அழைத்து வருபவர்களைத்தான்
வட்டப் பொறுப்பு பதவி பெற முடியும் என்று ரஜினி ரசிகர் மன்ற நிர்வாகிகளுக்கு ரகிசிய உத்தரவிடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இதன் காரணமாக அரசியல் ஆதாயம் பெற துடிப்பவர்கள், டிக்கெட் வாங்க போட்டா போட்டியிட்டு வருவதாக தெரிகிறது. இதனால் உண்மையான ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இப்படி சும்மா சிஸ்டத்தை கெடுக்கலாமா என்றும் உண்மையான ரஜினி ரசிகர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.