குட் நியூஸ்..மாணவிகளுக்கு மாதம் ரூ.1000 உதவித்தொகை.. ஜூலை 15ல் தொடக்கம்..? வெளியான முக்கிய தகவல்..

By Thanalakshmi VFirst Published May 13, 2022, 4:53 PM IST
Highlights

கல்லூரி மாணவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கும் திட்டம் ஜூலை 15ம் தேதி காமராஜர் பிறந்தநாள் முதல் அமலுக்கு வர உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
 

அரசுப் பள்ளிகளில் படித்த மாணவிகள் உயர் கல்வியில் இடைநிற்றலைத் தடுக்கும் வகையில் மாதம் 1000 ரூபாய் அளிக்கப்படும் என நடப்பு பட்ஜெட்டில் நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் அறிவித்தார். இந்த அறிவிப்பு பெற்றோர் மற்றும் மாணவிகளிடையே பெரும் வரவேற்பை பெற்றது. தமிழ்நாட்டில் அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவிகளின் உயர்கல்விச் சேர்க்கை மிகக் குறைவாக  இருப்பதைக் கருத்தில்கொண்டு, திருமண நிதியுதவித் திட்டம்  உயர் கல்வி உறுதித் திட்டம் என மாற்றியமைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது.

மேலும் படிக்க: இனி தாம்பரம் டூ வேளச்சேரி வாகன நெரிசலுக்கு நோ நோ.. சென்னையில் மிக நீளமான பாலம் இன்று திறந்து வைப்பு..

6 முதல் 12 ஆம் வகுப்பு வரை அரசுப் பள்ளிகளில் பயின்று மேற்படிப்பில் சேரும் அனைத்து மாணவிகளுக்கும் பட்டப்படிப்பு / பட்டயப்படிப்பு/ தொழிற்படிப்பு ஆகியவற்றில் இடைநிற்றல் இன்றி முடிக்கும் வரை, மாதம் 1,000 ரூபாய் அவர்கள் வங்கிக் கணக்கிற்கு நேரடியாகச் செலுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டது. இந்த திட்டத்தின் மூலம் சுமார் ஆறு லட்சம் மாணவிகள் ஒவ்வொரு ஆண்டும் பயன்பெற வாய்ப்புள்ளதாகவும் வரவு-செலவுத் திட்டத்தில் 698 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும் நிதியமைச்சர் தெரிவித்தார்.

இந்நிலையில் சமீபத்தில் செய்தியாளர்களிடம் பேசிய உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, உயர்கல்வி உதவி தொகை திட்டம் இந்த கல்வியாண்டிலே தொடங்கப்படும் என்று கூறினார். கல்லூரி மாணவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கும் திட்டம் ஜூலை 15ம் தேதி காமராஜர் பிறந்தநாள் முதல் அமலுக்கு வர உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மேலும் படிக்க: மாணவர்களுக்கு விடுமுறை அளித்தாலும் ஆசிரியர்கள் பள்ளிக்கு வர வேண்டும்.. பள்ளிக்கல்வித்துறை போட்ட திடீர் உத்தரவு

click me!