மாணவர்களுக்கு விடுமுறை அளித்தாலும் ஆசிரியர்கள் பள்ளிக்கு வர வேண்டும்.. பள்ளிக்கல்வித்துறை போட்ட திடீர் உத்தரவு

By Thanalakshmi VFirst Published May 13, 2022, 4:15 PM IST
Highlights

அரசுப்பள்ளி ஆசிரியர்கள் வரும் மே 20 ஆம் தேதி வரை கட்டாயம் பள்ளிக்கு வருகை தர வேண்டும் என்று பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
 

தமிழ்நாட்டில் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள், தனியார் மெட்ரிக் பள்ளிகளில் 1 முதல் 9ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கான  ஆண்டு இறுதித் தேர்வு இன்றுடன் முடிவடைந்தது. இதனால் 1 முதல் 9 ஆம் வகுப்பு வரை நாளை முதல் கோடை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. கோடை விடுமுறை முடிவடைந்து அடுத்த மாதம் ஜூன் 13 ஆம் தேதி பள்ளிகள் மீண்டும் திறக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. 

மேலும் படிக்க: மக்களே உஷார்.. உங்க ரேஷன் கார்டில் பெயர் நீக்கம் அல்லது சேர்க்கனுமா..? முக்கிய அறிவிப்பு வெளியீடு..

இந்நிலையில் மாணவர்களுக்கு தேர்வு முடிந்தாலும் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி ஆசிரியர்கள் வரும் 20 ஆம் தேதி வரை விடைத்தாள் திருத்தம் உள்ளிட்ட அலுவல் சார்ந்த பணிகளுக்காக பள்ளிகளுக்கு கட்டாயம் வருகை தர வேண்டும் என்று பள்ளிக்கல்வித்துறை தற்போது உத்தரவிட்டுள்ளது. ஆனால் பொதுத்தேர்வு பணியில் ஈடுபடும் ஆசிரியர்கள், வெளிநாடு செல்ல முன் அனுமதி பெற்றுள்ள ஆசிரியர்கள் பள்ளிக்கு வருகை புரிவதில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.

மேலும் 9ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கான ஆண்டு இறுதித் தேர்வு, 3ம் பருவத் தேர்வு முடிவுகள் வரும் 31ம் தேதி அந்தந்த பள்ளிகளில் வெளியிடப்பட உள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே ஆசிரியர்கள் 20ம் தேதிக்குப் பின் மீண்டும் எப்போது பள்ளிக்கு வர வேண்டும் என்பது குறித்தும் விடுமுறை நாட்கள் குறித்தும் பின்னர் தெரிவிக்கப்படும் என்றும் பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. 

மேலும் படிக்க: மகிழ்ச்சி செய்தி..! மாணவர்களே அலர்ட்.. நாளை முதல் கோடை விடுமுறை.. எத்தனை நாட்கள் விடுமுறை..?

click me!