
சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக இருந்த சஞ்சய் கிஷன் கவுலுக்கு, உச்சநீதிமன்ற நீதிபதியாக பதவி உயர்வு அளிக்கப்பட்டது. இதையடுத்து, தலைமை நீதிபதியாக (பொறுப்பு) ஹூலுவாடி ஜி.ரமேஷ் நியமிக்கப்பட்டார்.
இந்நிலையில், கடந்த 31ம் தேதி, இந்திரா பானர்ஜி சென்னை உயர்நீதிமன்ற புதிய தலைமை நீதிபதியாக அறிவிக்கப்பட்டார்.
இந்நிலையில், சென்னை உயர்நீதிமன்றத் தலைமை நீதிபதியாக, இந்திரா பானர்ஜி இன்று பதவியேற்றார். தமிழக கவர்னர் (பொறுப்பு) வித்யாசாகர் ராவ், அவருக்கு பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். இதில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டார்.
இந்திரா பானர்ஜி, 1985 ம் ஆண்டு கொல்கத்தா உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞராக பணியாற்றினார். சுமார் 17 ஆண்டுகள் கொல்கத்தா நீதிமன்றத்தில் பணியாற்றிய அவர், கடந்த 2002ம் ஆண்டு கொல்கத்தா உயர் நீதிமன்றத்தின் நீதிபதியானார்.
இதைதொடர்ந்து 2016ம் ஆண்டு டெல்லி உயர் நீதிமன்றத்தில் நீதிபதியாக செயல்பட்டார். தற்போது, சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக பதவியேற்றுள்ளார்.