Deepavali: அதிர்ச்சி !! பிளாட்பார்ம் கட்டணத்தை இரு மடங்கு உயர்த்திய தெற்கு ரயில்வே.. எவ்வளவு தெரியுமா..?

By Thanalakshmi VFirst Published Oct 18, 2022, 2:32 PM IST
Highlights

ரயில்நிலையங்களில் நடைபாதை கட்டணத்தை இரு மடங்காக உயர்த்தி இந்திய ரயில்வே அறிவிப்பு வெளியிட்டுள்ளது. சென்னை கோட்டத்திற்கு உட்பட்ட 8 ரயில் நிலையங்களில் நடைபாதை டிக்கெட் விலையை  உயர்த்தி தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
 

இந்த ஆண்டு தீபாவளி பண்டிகை அக்.24 ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. நாடு முழுவதும் பண்டிகை முன்னிட்டு, தீபாவளி விற்பனை களைக்கட்டியுள்ளது. கொரோனா பாதிப்பினால் கடந்த 2 ஆண்டுகளாக தீபாவளி பண்டிகை கட்டுப்பாடுகளுடன் கொண்டாடப்பட்டது. எனவே இந்தாண்டு தீபாவளிக்கு லட்சக்கணக்கான மக்கள் சொந்த ஊருக்கு திரும்புவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தீபாவளிக்கு இன்னும் 6 நாட்களே உள்ளதால் தற்போது இருந்தே ரயில் நிலையங்களில் கூட்டம் அலைமோதுகிறது. இந்நிலையில்  ரயில்நிலையங்களில் நடைபாதை கட்டணத்தை இரு மடங்காக உயர்த்தி இந்திய ரயில்வே அறிவிப்பு வெளியிட்டுள்ளது. சென்னை கோட்டத்திற்கு உட்பட்ட 8 ரயில் நிலையங்களில் நடைபாதை டிக்கெட் விலையை  உயர்த்தி தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

மேலும் படிக்க:நயன் - விக்கி முதல் ரவீந்தர் - மகாலட்சுமி வரை.. இந்த வருஷம் ஜம்முனு தலை தீபாவளி கொண்டாட உள்ள நட்சத்திர ஜோடிகள்

அதன் படி ரயில்நிலையங்களில் ரூ.10 ஆக இருந்த டிக்கெட் கட்டணம் தற்போது ரூ.20 உயர்ந்து ரூ.30 ஆக உள்ளது.  சென்னை சென்ட்ரல், எழும்பூர், தாம்பரம், காட்பாடி, செங்கல்பட்டு, அரக்கோணம், திருவள்ளூர்,ஆவடி உள்ளிட்ட ரயில் நிலையங்களில் பிளாட்பார்ம் டிக்கெட் விலை உயர்த்தப்பட்டுள்ளது.

தீபாவளி பண்டிகையின் போது, ரயில் நிலையங்களில் கூட்டம் அதிகரிக்கும் என்பதால், அதனை கட்டுபடுத்தும் நோக்கில் நடைபாதை டிக்கெட் விலை உயர்த்தப்பட்டுள்ளதாக ரயில்வே நிர்வாகம் விளக்கமளித்துள்ளது. ஏற்கனவே நாட்டில் அத்தியாவசியமான பொருட்களின் விலை உயர்ந்துள்ள நிலையில், தற்போது நடைபாதை டிக்கெட் விலை உயர்வு மக்களை பெருமளவில் பாதிக்கும் என்று சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.

மேலும் படிக்க:Watch : தீபாவளி விற்பனை - நெல்லையில் ஒரே நாளில் ரூ.4 கோடிக்கு ஆடுகள் விற்பனை படுஜோர்!

click me!