பொங்கலுக்கு அடுத்த நாள் மதுரை – சண்டிகர் அதிவிரைவு ரயிலை இந்திய ரயில்வே திடீரென ரத்து செய்துள்ளதால் பயணிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
பொங்கலுக்கு அடுத்த நாள் மதுரை – சண்டிகர் அதிவிரைவு ரயிலை இந்திய ரயில்வே திடீரென ரத்து செய்துள்ளது. இதனால் சென்னை முதல் சண்டிகர் வரையிலான நகர்களுக்கு செல்ல வேண்டிய ரயில் பயணிகளுக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது. சென்னையில் வசிக்கும் பெரும்பாலான மக்கள் வெளியூர், வெளி மாநிலங்களை சேர்ந்தவர்கள் தான். சென்னையில் மட்டும் லட்சக்கணக்கான வெளியூர் மக்கள் வேலை பார்த்து வருகின்றனர்.
அதே போல் தமிழ்நாட்டில் இருந்து வெளி மாநிலங்களுக்கு சென்று பலரும் பணிபுரிகின்றனர். இவர்களில் பலரும் தீபாவளி, பொங்கல் போன்ற பண்டிகைகளை சொந்த ஊரில் கொண்டாடுவது வழக்கம். அதிலும் பண்டிகை காலங்களில் சொந்த ஊருக்கு செல்ல ரயில் டிக்கெட் கிடைப்பது என்பது அவ்வளவு சாதாரண விஷயம் இல்லை.
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D
ரயில் பயணத்திற்கு 4 மாதங்களுக்கு முன்பு முன்பதிவு தொடங்கும். ஆனால் அதற்குள் பயணத்தை திட்டமிட்டு ஐஆர்சிடிசி இணையதளத்தில் முன்பதிவு செய்ய வேண்டும். பொதுவாக இதுபோன்ற பண்டிகை காலங்களில் அதிகமானோர் ஒரே நேரத்தில் முன்பதிவு செய்வதால் இணையதளம் திணறும். அல்லது வங்கி இணையதளத்தில் சிக்கல் ஏற்படும். எல்லாவற்றை தாண்டி முன்பதிவு செய்து வெயிட்டிங் லிஸ்ட் இல்லாம்ல், கன்ஃபார்ம் டிக்கெட் பெறுவது என்பது மிகப்பெரிய விஷயம்.
எந்த ரயிலில் டிக்கெட் கிடைக்கிறதோ அதற்கேற்றவாறு தங்கள் சொந்த ஊருக்கு செல்ல பயணத்தை திட்டுமிடுகின்றனர். அந்த வகையில் வரும் பொங்கல் பண்டிகைக்காக ஏராளமான மக்கள் மற்ற வெளியூர்களில் இருந்து சொந்த ஊருக்கு வர டிக்கெட் முன் பதிவு செய்தனர். அதே போல் பொங்கல் பண்டிகை முடிந்த பிறகு மீண்டும் தாங்கள் வசிக்கும் நகர்களுக்கு செல்ல முன்பதிவு செய்துள்ளனர்.
இப்படி முன்பதிவு செய்த ரயில் பயணிகளுக்கு நவம்பர் 14-ம் தேதி ஒரு அதிர்ச்சியை கொடுத்தது இந்திய ரயில்வே. மதுரை – சண்டிகர் ரயில் முன்பதிவு செய்தவர்களுக்கு ஒரு எஸ்.எம்.எஸ் வந்துள்ளது. அதில் 17.01.2024 அன்று 12387 ரயில் தவிர்க்க முடியாத காரணங்கள் ரத்து செய்யப்படுவதாகவும், சிரமத்திற்கு வருந்துவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
திடீரென ஒரு ரயிலை ரத்து செய்தால், அந்த ரயிலில் பயணம் செய்ய முன்பதிவு செய்திருப்பவர்களின் நிலை என்ன? சாதாரண நாட்கள் என்றால் கூட மாற்று ரயில்களை தேர்வு செய்யலாம். பண்டிகை காலங்களில் அதற்கெல்லாம் வாய்ப்பே இல்லை.
ஜன, பிப்ரவரியில் டெல்லி செல்லும் ரயில்கள் ரத்து! முழுவிவரம் இதோ..
மதுரையில் இருந்து வாரத்திற்கு 2 முறை இயக்கப்படும் இந்த சண்டிகர் விரைவு ரயில் சென்னை, விஜயவாடா, வாரங்கல், சந்திரபூர், நாக்பூர், போபால், ஜான்சி, குவாலியர், ஆக்ரா, மீரட், அம்பாலா வழியே சண்டிகர் செல்கிறது. ஆனால் திடீரென ரயில் ரத்து செய்யப்பட்டால் பயணிகளின் நிலை என்ன?
பயணத்திற்கு இன்னும் 2 மாதங்கள் இருக்கும் நிலையில், 2 மாதங்களுக்கு முன்பாகவே மாற்று ஏற்பாடு செய்ய முடியாத அளவுக்கு அப்படி என்ன தவிர்க்க முடியாத சூழல் வந்திருக்கும். அப்படியே இருந்தாலும், அந்த தவிர்க்க முடியாத சூழலை சரிசெய்து மதுரை – சண்டிகர் அதிவிரைவு ரயிலை மீண்டும் இயக்க வேண்டும் என்பதே நூற்றுக்கணக்கான ரயில் பயணிகளின் கோரிக்கையாக உள்ளது. இதுவே ரயில்வே மீதான பொதுமக்களின் நம்பிக்கையை உறுதி செய்யும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.