காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி இந்திய கம்யூனிஸ்டு இரயில் மறியல்...

 
Published : Apr 05, 2018, 10:21 AM ISTUpdated : Sep 19, 2018, 02:12 AM IST
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி இந்திய கம்யூனிஸ்டு இரயில் மறியல்...

சுருக்கம்

Indian Communist train block protest for cauvery management board

தருமபுரி

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க  மத்திய அரசை வலியுறுத்தி இந்திய கம்யூனிஸ்டு கட்சயினர் தருமபுரியில் இரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். 

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க நடவடிக்கை எடுக்காத மத்திய அரசை கண்டித்து தருமபுரி மாவட்டம், ஓசூரில் இந்திய கம்யூனிஸ்டு கட்சி சார்பில் நேற்று இரயில் மறியல் போராட்டம் நடைபெற்றது.

இந்தப் போராட்டத்திற்கு அக்கட்சியின் மாநிலக்குழு உறுப்பினர் எம்.லகுமய்யா தலைமை தாங்கினார். இதில் முன்னாள் மாவட்ட செயலாளர் பி.சி.நஞ்சப்பா உள்பட 300-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். 

பின்னர் திடீரென கட்சியினர் இரயில் மீது ஏறியும், படுத்தவாறும் மத்திய அரசுக்கு எதிரான முழக்கங்களை எழுப்பினார்கள்.

இதனையடுத்து இரயில் மறியலில் ஈடுபட்ட 45 பெண்கள் உள்பட 260 பேர் கைது செய்யப்பட்டு, ஒரு தனியார் மண்டபத்தில் காவலர் காவலில் வைக்கப்பட்டனர்.

பின்னர் மாலையில் அனைவரும் விடுதலை செய்யப்பட்டனர்.
 

PREV
click me!

Recommended Stories

தவெக கூட்டத்தில் உணவு கிடையாது.. தண்ணீர் பாட்டில் மட்டும்தான்.. செங்கோட்டையன் விளக்கம்
தொடர் விடுமுறை.. சொந்த ஊர் போறீங்களா?.. போக்குவரத்துக்கழகம் சொன்ன குட்நியூஸ்..!