
ஜோகன்னஸ்பர்க்கில் நடைபெற்று வரும் இந்தியா - தென்னாப்பிரிக்கா இடையிலான 3-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டியில் இந்தியா 63 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
தென்னாப்ரிக்கா அணி 8.2 ஓவர்களில் 17 ரன்கள் எடுத்திருந்த நிலையில் மூன்றாம் நாள் ஆட்டம் முன்னதாகவே முடித்துக்கொள்ளப்பட்டது.
இன்றைய நாள் ஆட்டத்தின் இரண்டாவது செஸ்சனின்போது, களமிறங்கிய தென்ஆப்ரிக்க வீரர்கள் இந்திய அணியினரின் பந்துவீச்சுக்கு ஈடுகொடுக்க முடியாமல் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர்.
டி வில்லியர்ஸ் 6 ரன்களிலும், டூ பிளஸ்சிஸ் 2 ரன்களிலும், டீ காக் டக் அவுட்டும் ஆகினர். வெர்னான் பிளாண்டர் 10 ரன்னில் ஆட்டமிழந்தார். அடுத்து சில வீரர்கள் தொடர்ந்து டக்அவுட் ஆக,கடைசியில்நிகிடி களமிறங்கினார்.
நிகிடி 4 ரன்களில் ஆட்டமிழந்தார். தென்னாப்ரிக்கா அணி 177 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது.
இதன்மூலம் 63 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி பெற்றது.மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை தென்னாப்ரிக்கா அணி 2-1 என கைப்பற்றியது என்பது குறிப்பிடத்தக்கது.