மனைவிக்கு தெரியாமல் தங்கையுடன் 2-வது கல்யாணம்! கைக்குழந்தையுடன் கிணற்றில் குதித்த பெண்!

 
Published : Jan 27, 2018, 11:06 AM ISTUpdated : Sep 19, 2018, 01:52 AM IST
மனைவிக்கு தெரியாமல் தங்கையுடன் 2-வது கல்யாணம்! கைக்குழந்தையுடன் கிணற்றில் குதித்த பெண்!

சுருக்கம்

women Suicide with her baby for her husband Marriage Sister

மனைவிக்கு தெரியாமல் மச்சினிச்சியை 2-வதாக திருமணம் செய்ததாக தகவல் அறிந்த பெண் தனது கைக்குழந்தையுடன் கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டார்.

விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே உள்ள செவ்வனந்தல் கிராமத்தை சேர்ந்தவர் சக்திவேல். செஞ்சியில் வேன் டிரைவராக வேலை செய்கிறார். இவருக்கும் அவியூரை சேர்ந்த முனுசாமி மகள் ராஜேஸ்வரி  என்பவருக்கும் கடந்த 1½ ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. தற்போது  இவர்களுக்கு 3 மாத கைக்குழந்தை இருந்தது.

இந்நிலையில், ராஜேஸ்வரியின் தங்கை புவனேஸ்வரி கடந்த சில மாதங்களாக அக்காவையும் குழந்தையும் பார்க்க போகிறேன் என வீட்டில் சாக்கு சொல்லிவிட்டு அடிக்கடி செவ்வனந்தல் கிராமத்துக்கு வந்து சென்றுள்ளார். அப்போது அவருக்கும் சக்திவேலுக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டு ஒருவருக்கொருவர் நெருங்கி பழகி வந்ததாக கூறப்படுகிறது. இதனால் மச்சினிச்சி மேல் இருந்த மோகத்தில் தனது மனைவியிடம் சண்டைபோட்டுள்ளார்.

இதனையடுத்து, நேற்று முன்தினம் இரவு வீட்டில் இருந்த சக்திவேலுவும், புவனேஸ்வரியும் திடீரென மாயமாகினர். இதையடுத்து ஊருக்குள் சக்திவேல், தனது மைத்துனியுடன் வீட்டை விட்டு ஓடி திருமணம் செய்து கொண்டதாக அந்த ஊர் முழுவதும் தகவல் பரவியது.

இதனால், மனமுடைந்த ராஜேஸ்வரி அவமானம் தாங்க முடியாமல் தனது 3 மாத கைக்குழந்தையுடன் ஒரு விவசாய கிணற்றில் தனது கைக்குழந்தையுடன் குதித்து தற்கொலை செய்து கொண்டார்.

இதுபற்றி தகவல் அறிந்த செஞ்சி போலீஸார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து, கிணற்றில் பிணமாக மிதந்த தாய், குழந்தையை பொதுமக்கள் உதவியுடன் மீட்டனர். இதையடுத்து கைப்பற்றிய உடல்களை பிரேத பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.  

தங்கையுடன் கணவர் வீட்டை விட்டு ஓடிப் போய் 2-வது திருமணம் செய்து கொண்டதாக தகவல் கிடைத்ததால் தனது 3 மாத கைக்குழந்தையுடன் பெண் கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்தபகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. 

PREV
click me!

Recommended Stories

2026 புத்தாண்டு கொண்டாட்டம்.. தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் போட்ட அதிரடி உத்தரவு!
ஆட்டம், பாட்டம், கொண்டாட்டத்துக்கு ரெடியா?.. 'சென்னை சங்கமம்-நம்ம ஊரு திருவிழா'.. தேதி குறித்த அரசு!