சசிகலாவின் முதல் பொது நிகழ்ச்சி – 5 மாநில முதல்வர்கள் பங்கேற்கும் இந்தியா டுடே கருத்தரங்கை துவக்கி வைத்தார்

First Published Jan 9, 2017, 10:33 AM IST
Highlights


தென்னிந்தியாவின் முக்கிய நபர்கள் பங்கேற்கும் இந்தியா டுடே உலக மாநாடு சென்னையில் தொடங்கியது. இதில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா படத்தை திறந்து வைத்த அதிமுக பொது செயலாளர் சசிகலா, கண் கலங்கினார்.

தென்னிந்தியாவில் பிரபலங்கள் பங்கேற்கும் இந்தியா டுடே ஊடக மாநாடு சென்னையில் துவங்கியது. இந்தியா டுடே சார்பில் நடத்தப்படும் இந்த மாநாடு பத்திரிகை துறையில் பிரபலமானது. இந்தாண்டு சென்னையில் இந்த மாநாடு நடைபெறுகிறது.

இந்த மாநாட்டில் தென் மாநிலங்களின் முதலமைச்சர்கள், முக்கிய அரசியல் பிமுகர்கள், மத்திய அமைச்சர்கள், முன்னாள் அமைச்சர்கள் கலந்து கொள்கின்றனர். இதுதவிர, சினிமா பிரபலங்கள், நடிகர் கமலஹாசன், நடிகைகள் ஸ்ரேயா, தமன்னா உள்ளிட்டோர் கலந்துகொள்கின்றனர்.

முதல் நாள் மாநாட்டை முதலமைச்சர் ஒ.பன்னீர்செல்வம், எழுச்சி பெரும் தமிழகம் என்ற தலைப்பில் உரையாற்றுகிறார். கலைத்துறையில் தங்களது அனுபவங்களை நடிகர் கமலஹாசன், தமன்னா, ஸ்ரேயா ஆகியோர் பகிர்ந்து கொள்கின்றனர்.

இன்று துவங்கிய இந்தியா டுடே ஊடக கருத்தரங்கில் முக்கிய விருந்தினராக அதிமுக பொது செயலாளர் சசிகலா கலந்து கொண்டார். பின்னர், இந்தியா டுடே ஊடக கருத்தரங்கை, ச்சிகலா குத்துவிளக்கு ஏற்றி தொடங்கி வைத்தார். இதையடுத்து மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் திருவுருவப்படத்தை திறந்து வைத்தார்.

அப்போது அரங்கில் உள்ள மிகப்பெரிய திரையில் ஜெயலலிதாவின் புகைப்பட காட்சிகள் வெளியானது. அதை பார்த்த சசிகலா, கண் கலங்கினார். கண்களில் வழிந்த கண்ணீரை அடக்க சிரமப்பட்டார். கைக்குட்டையை எடுத்து கண்களில் வடிந்த கண்ணீரை துடைத்து கொண்டு, ஒரு வழியாக தன்னை நிதானப்படுத்தி கொண்டார்.

பின்னர், மறைந்த முதல்வர் ஜெயலலிதாவை பற்றி, அதிமுக முன்னாள் மாநிலங்களவை தலைவர் மைத்திரேயன், விளக்கி பேசினார்.

click me!