‘மத்திய அரசை கண்டித்து இந்து மக்கள் கட்சியினர் ஆர்ப்பாட்டம்’

 
Published : Oct 18, 2016, 02:19 AM ISTUpdated : Sep 19, 2018, 01:39 AM IST
‘மத்திய அரசை கண்டித்து இந்து மக்கள் கட்சியினர் ஆர்ப்பாட்டம்’

சுருக்கம்

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மறுக்கும் மத்திய அரசை கண்டித்து வாணியம்பாடியில் இந்து மக்கள் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

வேலூர் மாவட்டம் வாணியம்பாடி பேருந்து நிலையத்தில் இந்து மக்கள் கட்சியினர் மாவட்ட இணை செயலாளர் ரமேஷ் தலைமையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இதில், தமிழக கர்நாடக நதிநீர் பிரச்சனையில் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை மத்திய அரசு உதாசீனப்படுத்திய  மத்திய அரசை கண்டித்தும், உச்சநீதிமன்ற தீர்ப்பை மதிக்காத கர்நாடக அரசை கலைக்கவேண்டும் என்று வலியுறுத்தியும், காவிரி மேலாண்மை வாரியதிற்கு எதிராக மத்திய அரசு உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனுவை திரும்ப பெற வலியுறுத்தியும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த ஆர்பாட்டத்தில் கோட்ட அமைப்பாளர் சீனிவாசன், மாநில செயலாளர் ரமேஷ்,மாநில மாணவர் அணி தலைவர் கோபிநாதன்,மாநில பிரசார அணி செயலாளர் குமரன் உள்பட இந்து மக்கள் கட்சியினர் ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

PREV
click me!

Recommended Stories

தவெக கூட்டத்தில் உணவு கிடையாது.. தண்ணீர் பாட்டில் மட்டும்தான்.. செங்கோட்டையன் விளக்கம்
தொடர் விடுமுறை.. சொந்த ஊர் போறீங்களா?.. போக்குவரத்துக்கழகம் சொன்ன குட்நியூஸ்..!