விவேக் தொடர்ந்து டிமிக்கி - சட்டப்படி நடவடிக்கை எடுப்போம் வருமான வரித்துறை எச்சரிக்கை

First Published Dec 28, 2016, 11:43 AM IST
Highlights


தமிழக அரசியலில் பெரிய சூறாவளியை ஏற்படுத்திய நிகழ்வு நவம்பர் 8 ஆம் தேதிக்கு பிறகு நடந்தது. பழைய 1000, 500 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்ற அறிவிப்புக்கு பிறகு நடந்த வருமான வரிச்சோதனையில் பலர் சிக்கினர்.

அதில் முக்கியமானவர் சேகர் ரெட்டி. தமிழகத்தின் மிகப்பெரிய மணல் மாஃபியா, பொதுப்பணித்துறை காண்ட்ராக்டர். என பன்முகத்தன்மை கொண்ட சேகர்ரெட்டியின் வீடு அலுவலகங்களில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர். இதில் ஏராளமான ஆவணங்கள் , டைரிக்கள், கோடிக்கணக்கான புதிய ரூபாய் நோட்டுகள் கிலோ கணக்கில் தங்கம் சிக்கியது. 

பின்னர்  சேகர் ரெட்டி  அவரது கூட்டாளிகள் ரத்தினம் , ராமச்சந்திரன் உள்ளிடோர் சிபிஐயால் கைது செய்யப்பட்டனர். இவர்களுடன் தலைமை செயலாளர் ராம்மோகன் ராவின் மகன் விவேக்குக்கும் தொடர்பு இருப்பது தெரியவந்தது. 

தமிழகம் முழுதும் பிஸ்னெஸ் பார்ட்னராக உள்ள தகவலும் வெளியான அடிப்படையில் அவரது வீடு அலுவலகம் உள்ளிட்ட இடங்களிலும் , தலைமை செயலாளர் வீடு அறையிலும் சோதனை நடத்தப்பட்டது. 

இதில் ஏராளமான ஆவணங்கள் ரொக்கப்பணம் , நகைகள் சிக்கியது. இது குறித்து விசாரணை நடத்த கடந்த 6 நாட்களாக விவேக் ராம்மோகன ராவுக்கு சம்மன் அனுப்பி வருமான வரித்துறையினர் காத்திருக்கின்றனர். ஆனால் அவர் வராமல் டிமிக்கி கொடுத்து வருகிறார்.

இதுபற்றி கருத்து தெரிவித்த வருமான வரித்துறையினர் இறுதி சம்மன் அனுப்பி வைப்போம் அதன் பிறகும் ஆஜராகாவிட்டால் சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என கூறியுள்ளனர். 

இதற்கிடையில் உயர்நீதிமன்றத்தில் தான் கைது செய்யப்படாமல் இருக்க முன் ஜாமீன் கேட்டு மனுதாக்கல் செய்தார் விவேக் ராம்மோகன ராவ். அது இன்னும் ஏற்கப்படவில்லை. இந்நிலையில் இன்று விவேக் ராம் மோகனராவ் ஆஜராகலாம் என்று கூறப்படுகிறது.

click me!