
சென்னையில் ஜவுளி கடைகள், நகை கடைகள் உள்ளிட்ட 23 இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர்.
சென்னை காந்தி பேப்ரிக்ஸ், காந்தி பேஷன்ஸ், ஜெயின் டெக்ஸ் டைல்ஸ் உள்ளிட்ட 23 இடங்களில் வருமான வரி சோதனை நடத்தப்பட்டு வருகிறது.
வரி ஏய்ப்பு மற்றும் ஜவுளி மொத்த வியாபாரத்தில் ஈட்டிய பணத்தை முறைகேடாக பயன்படுத்தியதாக வந்த புகாரின் அடிப்படையில் தி.நகர், சவுகார் பேட்டை உள்ளிட்ட இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.