முன்விரோதத்தால் தந்தை, மகளை கத்தியால் குத்திய பெண் கைது... மேலும் மூவருக்கு வலைவீச்சு...

 
Published : Jun 08, 2018, 09:41 AM ISTUpdated : Sep 19, 2018, 02:30 AM IST
முன்விரோதத்தால் தந்தை, மகளை கத்தியால் குத்திய பெண் கைது... மேலும் மூவருக்கு வலைவீச்சு...

சுருக்கம்

father and daughter knife attack woman arrested

விழுப்புரம்

விழுப்புரத்தில் முன்விரோதத்தால் தந்தை, மகளை கத்தியால் குத்திய பெண்ணை காவலாளர்கள் கைது செய்தனர். மேலும், மூவரை தீவிரமாக தேடி வருகின்றனர்.
 
விழுப்புரம் மாவட்டம், சங்கராபுரம் வட்டம், மாதவசேரியைச் சேர்ந்தவர் சாமுண்டி மனைவி பாவாயி (45). இவருக்கும், அதே ஊரைச் சேர்ந்த ராமசாமி மகன் செந்திலுக்கும் முன்விரோதம் இருந்து வந்தது. 

இந்த நிலையில், கடந்த 5-ஆம் தேதி இரவு 8.30 மணிக்கு தனது வீட்டின் முன்பு நின்றுக் கொண்டு பாவாயி திட்டிக் கொண்டிருந்தார்.

இதுகுறித்து ராமசாமி மனைவி அழகம்மாள் கேட்க, இரு தரப்பினருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதில், ஆத்திரமடைந்த அழகம்மாள், பெரியசாமி மகன் சடையன், அவரது மனைவி அஞ்சலம் (50) ஆகியோர் சேர்ந்து பாவாயியை தாக்கினராம். 

இதனைக் கண்டு ஓடிவந்த அவரது தந்தை அழகப்பனை (65) செந்தில் கத்தியால் குத்தினார். தடுக்க முயன்ற பாவாயியிக்கும் கத்திக்குத்து விழுந்தது.

பலத்த காயமடைந்த இருவரும் கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு, தீவிர சிகிச்சைக்காக விழுப்புரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். 

கச்சிராயப்பாளையம் காவலாள்ளர்கள் அஞ்சலத்தை கைது செய்தனர். தலைமறைவான செந்தில், அவரது தாயார் அழகம்மாள், சடையன் ஆகிய மூவரை தேடிவருகின்றனர்.
 

PREV
click me!

Recommended Stories

அதிமுக தேர்தல் அறிக்கை தயாரிக்க 10 பேர் கொண்ட குழு! பழனிசாமியின் பக்கா பிளான்!
கொளுத்திப் போட்ட எடப்பாடி..! கொந்தளித்த பிரேமலதா-டிடிவி, ஓபிஎஸ்..! ஆப்பு வைத்த வியூக வகுப்பாளர்கள்..!