
தமிழக அரசு தலைமை செயலாளர் ராமமோகன் ராவ் வீட்டில் இன்று காலை வருமான வரித்துறை அதிகாரிகள் அதிரடி சோதனையில் ஈடுபட்டடுள்ளனர். இதனால், அமைச்சர்கள் முதல் அதிகாரிகள் வரை அனைத்து தரப்பினரும் பீதியில் உறைந்துள்ளனர்.
சென்னை அண்ணா நகரில் உள்ள ராமமோகன் ராவ் வீடு உள்பட சென்னையில் மட்டும் 7 இடங்களில் தற்போது அதிரடி ரெய்டு நடந்து வருகிறது. மேலும், ராமமோகன் ராவுக்கு சொந்தமான ஆந்திர மாநிலத்தில் உள்ள 2 வீடுகளிலும் அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவுக்கு பின், அதிமுகவிலும், ஆட்சியிலும் ஒருசில மாற்றங்கள் ஏற்பட்டுள்ளதாகவும், அதில் ஒரு பகுதி இந்த சம்பவம் எனவும் அரசியல் வட்டாரங்கள் கூறுகின்றன.