வங்கிக்கு செல்லும் மக்களுக்கு ஓர் எச்சரிக்கை!

First Published Dec 21, 2016, 10:54 AM IST
Highlights


திருவண்ணாமலையில் வங்கி முன் மொபெட் வண்டியை நிறுத்திவிட்டு, வங்கிக்குச் சென்று திரும்பி வருவதற்குள் வண்டியை திருடிச் சென்றுவிட்டனர். திருடிய மர்ம நபர்களை காவலாளர்கள் தேடி வருகின்றனர்.

திருவண்ணாமலை - பெரும்பாக்கம் சாலையில் உள்ள ஒரு குழந்தைகள் காப்பகத்தில் ஆசிரியையாக வேலை செய்பவர் அனிதா (26). இவர், கடந்த மாதம் 29-ஆம் தேதி காப்பகத்துக்குச் சொந்தமான மொபெட்டில் திருவண்ணாமலை, சின்னக்கடை தெருவில் உள்ள இந்தியன் வங்கிக்குச் சென்றார்.

வங்கி முன் மொபெட்டை நிறுத்திவிட்டு உள்ளே பண வேலையாகச் சென்ற அவர், வெளியே வந்து பார்த்தபோது, மொபெட்டைக் காணவில்லை.

அக்கம், பக்கத்தில் தேடியும் மொபெட் கிடைக்காததால் சோகமடைந்த அனிதா, இதுகுறித்து திருவண்ணாமலை கிழக்கு காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

அந்த புகாரின்பேரில், காவலாளர்கள் வழக்குப்பதிந்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.

இரயில் நிலையங்கள், பேருந்து நிலையங்கள் போன்ற பொது இடங்களில், உங்களது உடைமைகள் தொலைந்து போனால் நீங்கள் தான் பொறுப்பு என்று பதாகைகள் வைப்பது போல இனி வங்கி வாசலின் முன்பும் வைக்கப்பட வேண்டியது தான்.

500 ரூபாய் லாட்டரி விழ்ந்ததற்கு, 3000 ரூபாய் கதவைப் பெயர்த்து எடுத்து செல்லும் காமெடி போன்று இருக்கிறது.

2000 ரூபாய் பணம் எடுக்க வங்கிக்குள் நுழைந்தால், வெளியில் நிற்கும் 40 ஆயிரம் ரூபாய் வண்டிக்கு உத்தரவாதம் இல்லை. நீங்களும் வங்கிக்கு செல்லும்போது எச்சரிக்கையுடன் இருங்கள்…

click me!