திருத்தணியில் ரியல் எஸ்டேட் அதிபர் வீட்டில் வருமான வரித்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை

By Velmurugan s  |  First Published Apr 10, 2024, 4:08 PM IST

திருத்தணியில் ரியல் எஸ்டேட், பைனான்ஸ், ஏல சீட்டு நடத்தி வரும் ஜெயக்குமார் என்பவரது வீட்டில் வருமானவரித்துறை அதிகாரிகள் 15 பேர் அதிரடி சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.


திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி நகராட்சியில் ராதாகிருஷ்ணன் தெருவில் வசிக்கும் ஜெயக்குமார் என்பவர் திருத்தணி மற்றும் கர்நாடக மாநிலம் பெங்களூரு போன்ற பகுதிகளில் பல கோடிகளுக்கு சொத்து வாங்கி வைத்துள்ளதாகக் கூறப்படுகிறது. இந்த நிலையில் இவர் ரியல் எஸ்டேட், பைனான்ஸ், பல கோடிகளுக்கு ஏல சீட்டு போன்ற தொழில்களும் செய்து வருவதாகக் கூறப்படுகிறது.

மோடியிடம் மீண்டும் ஆட்சியை கொடுத்தால் நம்மை குழி தோண்டி புதைத்துவிடுவார்கள்; கோவையில் சீமான் பேச்சு

Latest Videos

மேலும், திருத்தணியில் அரசியல் கட்சியினர் பலருக்கும் மிகவும் நெருக்கமானவராகவும் கருதப்படுகிறார். அரசியல் பிரமுகர்களுடன் சேர்ந்து தொழில் செய்து வருவதாகவும் கூறப்படுகிறது.

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் பிரசார பாடலுக்கு துள்ளல் நடனமாடிய பொன்முடி; பெண்கள் உற்சாகம்

இந்த நிலையில் ராதாகிருஷ்ணன் இருக்கும் வீட்டில் 15 வருமானவரித்துறை அதிகாரிகள் தேர்தல் அவசரம் என்று எழுதப்பட்டிருந்த இரண்டு சொகுசு கார்களில் வந்து அதிரடி சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். பாதுகாப்பு காரணங்களுக்காக 6 துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பான நிலை ஏற்பட்டுள்ளது.

click me!